பேட்டரியை கழற்றாமல் நேரடியாக சார்ஜ் போடலாம்! புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில்கொண்டு எளிதாக சார்ஜ் செய்யும் வசதியுடன் விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டரியை கழற்றி தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வீட்டு சார்ஜர் வசதியுடன் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.1.13 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கழற்றிச் சென்று அதற்குரிய சார்ஜரில் போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பேட்டரியை தனியாக கழற்றி தூக்கிச் சென்று சார்ஜ் போடுவது சிரமத்தை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டு ஸ்கூட்டரிலேயே நிலையான பேட்டரி பொருத்தப்பட்ட விடா விஎக்ஸ்2 வேரியண்ட் தற்போது வந்துள்ளது.

Hero Vida VX2 Go FB

இந்த புதிய வேரியணட்டிற்கு விஎக்ஸ்2 Go FB என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை வீட்டிலுள்ள 3-பின் சார்ஜர் மூலமாக எளிதாக சார்ஜ் செய்ய முடியும். இதனால், தினமும் பேட்டரியை கழற்றி தூக்கிச் செல்ல வேண்டிய சிரமத்தை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும்.

புதிய ஹீரோ விடா விஎக்ஸ2 G0 FB வேரியண்ட்டில் 3.1kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐடிசி வழங்கியுள்ள சோதனை நிலைகளின் சான்றுபடி, இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 128கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இதன் பேட்டரி 0 முதல் 80% அளவுக்கு சார்ஜ் ஆக 65 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பல சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவுகரியமான இருக்கை அமைப்பு, 27.2 லிட்டர் கொள்ளளவு உடைய பொருட்கள் வைப்பதற்கான பூட் ஸ்பேஸ், 4.3 இன்ச் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஹீரோ நிறுவனத்தின் விடா விஎக்ஸ்2 மாடலானது தற்போது 5 விதமான தேர்வுகளில் கிடைக்கிறது. விஎக்ஸ்2 கோ மாடலில் உள்ள 2.2kWh பேட்டரி முழுமையான சார்ஜில் 93 கிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டது. அடுத்து தற்போது வந்துள்ள நிலையான பேட்டரி பொருத்தப்பட்ட விஎக்ஸ் கோ எஃப்பி மாடலில் உள்ள 3.1kWh பேட்டரி 128 கிமீ தூரம் ரேஞ்ச் வழங்கும்.

மூன்றாவது தேர்வான விஎக்ஸ்2 கோ வேரியண்ட்டில் உள்ள 3.4kWh பேட்டரி 146 கிமீ ரேஞ்ச் வரை செல்லும். விஎக்ஸ்2 ப்ளஸ் வேரியண்ட்டில் அதே 3.4kWh பேட்டரி 146 கிமீ வரை செல்லும். டாப் வேரியண்ட்டாக உள்ள விஎக்ஸ்2 ப்ளஸ் வேரியண்ட்டில் உள்ள 4.4kWh பேட்டரி அதிகபட்சமாக 187 கிமீ ரேஞ்ச் வரை செல்லும்.

இதுவரை விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டர்கள் கழற்றி எடுத்துச் சென்று தனி சார்ஜ் மூலமாக சார்ஜ் போடும் வகையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வந்துள்ள புதிய விஎக்ஸ்2 Go FB வேரியண்ட்டில் நிலையான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதுடன், வயர் மூலமாக வீட்டிலுள்ள 3 பின் சாக்கெட்டில் போட்டு சார்ஜ் ஏற்றும் வசதியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் வசதி உள்ளவர்களுக்கு இது ஏதுவானதாக இருக்கும்.

Article Published On: Monday, August 3, 2026, 7:27 [IST]
English summary
Vida vx2 go fb fixed battery electric scooter launched price range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out