187 கிமீ ரேஞ்சு.. வேகமான சார்ஜிங்குடன்.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது ஹீரோ

ஹீரோ நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் VX2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரிய பேட்டரி கொண்ட புதிய வேரியன்டை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தயாவில் விடா பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை ஹீரோ விற்பனை செய்து வருகிறது. அதன் விலை குறைவான VX2 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கூடுதல் ரேஞ்சைக் கொடுக்கும் விதமாக பெரிய பேட்டரி கொண்ட புதிய வேரியன்டை ஹீரோ வெளியிட்டுள்ளது. VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது இதுவரை 3.4 kWh பேட்டரி பேக் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பேட்டரி பேக்கானது 146 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது.

Vida VX2 Plus

இந்நிலையில், VX2 பிளஸ் வேரியன்டில் தற்போது 4.4 kWh என்ற பெரிய பேட்டரி பேக் தேர்வையும் ஹீரோ கொடுத்திருக்கிறது. இந்த பெரிய பேட்டரி பேக்கானது 187 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய வேரியன்டில் இரண்டு 2.2 kWh ரிமூவபிள் பேட்டரிக்கள் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பெரிய பேட்டரி பேக் ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரத்தைக் குறைக்கும் நோக்கத்தோட மிகவும் பவர்ஃபுல்லான 1 kW சார்ஜரையும் கொடுக்கிறது ஹீரோ. இதன் மூலம் இந்த 4.4 kWh பேட்டரி பேக்கை 0-80 சதவீதம் வரை 3.17 மணி நேரத்திலேயே முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக 5.08 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vida VX2 Plus

வீட்டிலேயே இவ்வளவு வேகமாக சார்ஜ் செய்ய முடிவது சிறப்பான விஷயம் தான். மேலும், DC ஃபாஸ்ட் சார்ஜைப் பயன்படுத்தும் போது வெறும் 65 நிமிடங்களிலேயே இந்த பெரிய பேட்டரி பேக்கை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் எனவும் ஹீரோ தெரிவித்துள்ளது.

இந்தப் பெரிய பேட்டரி பேக் மற்றும் வேகமான சார்ஜிங்கைத் தவிர்த்து VX2 பிளஸ் 3.4 kWh பேட்டரி பேக் வேரியன்டின் அம்சங்களே புதிய 4.4 kWh பேட்டரி பேக் வேரியன்டிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. VX2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 kW (8.04 hp) பவர் மற்றும் 26 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. எக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4.3 இன்ச் TFT டிஸ்பிளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விடா VX2 பிளஸ் 3.4 kWh வேரியன்டானது 1.18 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய 4.4 kWh பேட்டரி வேரியன்டை 1.44 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப். இந்த ஜூலை மாத இறுதியில் இருந்து இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை சற்று அதிகம் தான் என்றாலும், அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக VX2 பிளஸ்ஸை மாற்றியிருக்கிறது இந்தப் புதிய வேரியன்ட். அதிக பயன்பாடு கொண்டவர்கள் இந்தப் புதிய பெரிய பேட்டரி பேக் வேரியன்டை வாங்கலாம். இதன் மற்றொரு முக்கியமான அம்சமாக வேகமான சார்ஜிங் பார்க்கப்படுகிறது. இது இந்த ஸ்கூட்டரின் வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கும்.

Article Published On: Saturday, July 11, 2026, 11:50 [IST]
English summary
Vida vx2 plus gets big 4 4 kwh battery pack with more range
மேலும்... #hero motocorp #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out