தூத்துக்குடியில் தயாராகும் 3 இவி ஸ்கூட்டர்கள்! ஓலா எல்லாம் இருந்த இடம் தெரியாம போக போகுது!
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் பேட்டரி ஸ்வாப் தொழிற்நுட்பத்தில் 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளனர். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் குறித்த தகவல்களெல்லாம் நம்மை வியக்க வைத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனைக்காக அறிமுகப்படுத்திவிட்டன. இந்நிலையில் வின்ஃபாஸ்ட் கார்கள் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் டூ வீலர் துறையில் கவனம் செலுத்த திட்டமிட்டு வருகிறது.

இதன்படி நிறுவனம் இந்தியாவில் 4 புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இவோ, பிளிஸ் 2, வைப்பர் ஆகிய ஸ்கூட்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் எல்லாம் பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பத்தை பெற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் விற்பனைக்கு வரும்போது இந்தியா முழுவதும் 4500 பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்களை இந்நிறுவனம் நிறுவியிருக்கும் என தற்போது தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக இந்த 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே இந்தியா முழுவதும் உள்ள 34 இடங்களில் சுமார் 45,000 பேட்டரி ஸ்வாப் கேபினட்கள் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.முக்கியமான நகரங்களை மட்டும் முதலில் டார்கெட் செய்து அங்கு இந்த மையங்களை அமைத்து அந்த பகுதியில் மட்டும் இந்த ரக வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ஏற்கனவே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களிலேயே இந்த பேட்டரி ஸ்வாப் மையங்களையும் அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் வைப்பர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் டாப் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. இதில் பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட் சிஸ்டம் லொகேஷன் டிராக்கிங் ரிமோட் சர்ச் தெஃப்ட் புரொடக்சன் சிறப்பான ரைடு குவாலிட்டியா பின்பக்க டூயல் ஷாக் அப்சர்பர்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3000 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளீஸ் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை வைப்பர் ஸ்கூட்டரில் உள்ள அதே மோட்டார் செட் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இவோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2450வாட்ஸ் ஹப் மோட்டார் உள்ளது. இந்த இரண்டு வாகனங்களுமே அதே போல 70 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இவோ லைட் என்ற வெர்ஷன் இருக்கிறது. அது மட்டும் அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. அது தற்போது இந்தியாவிற்கு வருமா என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலுமே 1.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரி தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக நம்பகத்தன்மை மற்றும் வெப்ப வெளியீடு பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாக இந்த பேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் ஒரே நேரத்தில் இரண்டு பேட்டரிகளாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரிகளும் முழுமையாக சார்ஜ் ஏறினால் ஸ்கூட்டர் 165 கிலோமீட்டர் வரையிலும் வைப்பர் மற்றும் பளீஸ்2 ஸ்கூட்டர் 156 கிலோமீட்டர் வரையிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சாதாரண ரைடிங் கண்டிஷனுக்கான ரேஞ்ச் தான் ரியல் வாழ்வில் இது மாறுபடுவதற்கு உட்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பையே மாற்றி இந்த துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் பேட்டரிஸ் வேப்பபில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிய அளவில் விற்பனையாக வில்லை என்றாலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும் நம்பிக்கையை அளித்து வருகிறது என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications








