வின்ஃபாஸ்ட் மின்சார ஸ்கூட்டர், பைக்கிற்கு காப்புரிமை பதிவு

இந்திய மின்சார வாகனச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம், தற்போது இருசக்கர வாகனச் சந்தையிலும் நுழைவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களுக்கான புதிய வடிவமைப்புக் காப்புரிமைகளை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு மின்சார பைக்கும், மின்சார ஸ்கூட்டரும் இப்போது காப்புரிமைக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் இந்தியச் சந்தையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதா என்ற எதிர்பார்ப்பு தற்போது வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Vinfast Vento S

புதிய ஸ்கூட்டர்

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் வடிவமைப்பைப் பார்க்கும்போது, ஏற்கனவே வியட்நாமில் விற்பனையில் இருந்த வென்டோ எஸ் (Vento S) மாடலின் வடிவமைப்பை ஒத்திருப்பது தெரிகிறது. குறிப்பாக, பின்புற சக்கரத்தில் நேரடியாகப் பொருத்தப்படும் மோட்டாருக்குப் பதிலாக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட மோட்டார் அமைப்பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக கூறலாம்.

வியட்நாமில் விற்பனை செய்யப்பட்ட பழைய வென்டோ எஸ் ஸ்கூட்டரில் 3.5kWh லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டது. இதன் மின்சார மோட்டார் அதிகபட்சமாக 5.2kW திறனை வெளிப்படுத்தும். மணிக்கு 89 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்திருந்தது.

Also Read

ஆனால், இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்கூட்டரிலும் இதே பேட்டரி, மோட்டார் மற்றும் செயல்திறன் வழங்கப்படுமா என்பது உறுதியாகவில்லை. மேலும், காப்புரிமை வடிவமைப்பில் பின்புற டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்திய மாடலில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறலாம்.

Vinfast Bike

(Illustrative Image)

ஸ்போர்ட்டியான EV பைக்

இரண்டாவத காப்புரிமையில் இடம்பெற்றுள்ள மோட்டார்சைக்கிள் இன்னும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. பெரிய பேட்டரி அமைப்பு, அகலமான டயர்கள் மற்றும் ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் ஆகியவற்றுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் வின்ஃபாஸ்ட் முன்னதாகக் காட்சிப்படுத்திய செயல்திறன் மிக்க மின்சார மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை ஒத்திருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் தொடர்பாக வியட்நாமிய ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சுமார் 50kW திறன் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிமீ ஆக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

டீலர் நெட்வொர்க்

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையைத் தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும் வின்ஃபாஸ்ட் உருவாக்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 நகரங்களில் 50க்கும் மேற்பட்ட டீலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இருசக்கர வாகன விற்பனை மட்டுமின்றி, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், உதிரிபாகங்கள் கிடைப்பது மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகள் ஆகியவற்றிலும் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர், ஓலா போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட இவை முக்கியமானதாக இருக்கும்.

எப்போது அறிமுகம்?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் தாக்கல் செய்துள்ள காப்புரிமைகள் அதன் எதிர்காலத் திட்டங்களுக்கான அறிகுறியாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டர் மற்றும் பைக்கின் அறிமுகத் தேதி, விலை, பேட்டரி திறன் உள்ளிட்ட எந்த விவரங்களையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு வின்ஃபாஸ்ட் மின்சார இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் வரிசைக் கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, November 12, 2026, 17:17 [IST]
English summary
Vinfast electric scooter motorcycle design patents india
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out