100 கிமீ வேகம்... செயல்திறனில் மிரட்ட வரும் புதிய வின்ஃபாஸ்ட் இ-ஸ்கூட்டர்... காப்புரிமை பதிவு!!

வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம் அடுத்து ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் வடிவமைப்புக்கான காப்புரிமை பதிவு செய்துள்ளது. ரசாத் (Rasad) என்ற பெயரில் குறிப்பிடப்படும் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்ஸி ஸ்டைல் டிசைனில் இருக்கிறது.

ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட ரசாத் வடிவமைப்பை அடிப்படையிலான டிசைனை பெற்றுள்ளது. இந்த புதிய மேக்ஸி ஸ்டைல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழக்கமான பாரம்பரிய டிசைனிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். பெரிய அளவிலான தோற்றத்துடன் கூர்மையான டிசைன் அம்சங்களுடன் கவர்கிறது.

Vinfast EV

இந்த ஸ்கூட்டர் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற செயல்திறன் மிக்க வகையை சேர்ந்ததாக இருப்பதால், காற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக முன்புறத்தில் உயரமான விண்ட்ஸ்கிரீன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓட்டுபவரும், பின்னால் அமர்பவருக்கும் ஸ்டெப்டு வகை இருக்கை அமைப்பு உள்ளதால் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும்.

இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. முன்புறம் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ரசாத் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த புதிய ஸ்கூட்டரில் 7.1kWh அதிகபட்ச திறன் கொண்ட மின் மோட்டாரும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

அண்மையில் வைப்பர் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் காப்புரிமை பெற்றது. வைப்பர் மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர் ஏற்கனவே வியட்நாம் சந்தையில் விற்பனையில் உள்ளது. ஆனால், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பிரிமீயம் வகை மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டு காலத்தில், அதாவது அக்டோபர்-டிசம்பர் இடையிலான காலத்தில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த புதிய மாடல் எப்போது வரும் என்பது உறுதியாக தெரியவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் விற்பனையில் நல்ல வளர்ச்சி பெற்று வருவதால், பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களுடன் சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன.

அந்த வகையில், வின்ஃபாஸ்ட் நிறுவனமும் தனது புதிய மாடல்களுடன் விரைவில் இந்தியாவின் இருசக்கர வாகனச் சந்தையிலும் கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஏற்கனவே தடம் பதித்துவிட்ட வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விரைவில் வரிசை கட்ட உள்ளது. எனவே, இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரை கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Article Published On: Tuesday, August 11, 2026, 13:48 [IST]
English summary
Vinfast rasad electric scooter patent in india
மேலும்... #electric scooter #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out