250 கிமீ ரேஞ்ச், கழற்றி மாட்டும் பேட்டரி.. புதிய விஎல்எஃப் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் புதிய வரவாக வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா (VLF Strada) என்ற மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்பவர்களையும், தினசரி நகரப் பயணங்களுக்கு மின்சார ஸ்கூட்டர் தேடுபவர்களையும் இலக்காகக் கொண்டு இந்த மாடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் சிட்டி (City), மேக்ஸ் (Max) என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. இது முழு பேட்டரி சார்ஜில் அதிகபட்சமாக 250 கிமீ வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து கழற்றி தனியாக சார்ஜ் செய்யும் வசதியும் இருப்பதால், வீட்டில் அல்லது அலுவலகத்தில் சார்ஜிங் வசதி அமைப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

VLF Strada

விலை மற்றும் வேரியண்ட்டுகள்

வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா மின்சார ஸ்கூட்டர் சிட்டி மற்றும் மேக்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. இதில் சிட்டி வேரியண்ட்டில் 2.16 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ் வேரியண்ட்டில் மொத்தம் 4.32 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,55,500 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு மேக்ஸ் வேரியண்ட் ஏற்ற தேர்வாக இருக்கும்.

VLF Strada

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்

வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா ஸ்கூட்டரில் 4.8 கிலோவாட் உச்ச திறனை வெளிப்படுத்தும் பி.எல்.டி.சி (BLDC) ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 34 என்எம் டார்க் திறனை வழங்கும். அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் எக்கோ (Eco), சிட்டி (City), ஸ்போர்ட் (Sport) என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. எக்கோ மோடில் மணிக்கு 45 கிமீ வேகமும், சிட்டி மோடில் மணிக்கு 65 கிமீ வேகமும், ஸ்போர்ட் மோடில் மணிக்கு 85 கிமீ வேகமும் செல்லும். ஸ்கூட்டரை பின்னோக்கி நகர்த்த உதவும் ரிவர்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

VLF Strada

பேட்டரியைப் பொறுத்தவரை, இரண்டு வேரியண்ட்டுகளிலும் 2.16 kWh திறன் கொண்ட எல்.எஃப்.பி (LFP) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சிட்டி வேரியண்ட்டில் ஒரு பேட்டரியும், மேக்ஸ் வேரியண்ட்டில் இரண்டு பேட்டரிகளும் உள்ளன. இவற்றை ஸ்கூட்டரில் பொருத்திய நிலையிலும் சார்ஜ் செய்யலாம். தேவைப்பட்டால் கழற்றி தனியாகவும் வீட்டுக்குள் எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம்.

விஎல்எஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் தேவைப்படும். இரண்டு பேட்டரிகளைக் கொண்ட மேக்ஸ் வேரியண்ட்டுக்கு சுமார் 6 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read

டிசைன் மற்றும் முக்கிய வசதிகள்

வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து வித்தியாசமாகத் தெரியும் வகையில் ஸ்ட்ரேடாவின் வடிவமைப்பு அமைந்துள்ளது. முன்புறத்தில் இரட்டை புரொஜெக்டர் எல்.இ.டி ஹெட்லைட், காற்றைத் தடுக்கும் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடி, இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இருக்கை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் லக்கேஜ் ரேக்கும் உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 5 அங்குல டிஎஃப்டி (TFT) திரை, கீலெஸ் ஸ்டார்ட் வசதி மற்றும் முழுமையான எல்.இ.டி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மொபைல் போன்களை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-ஏ மற்றும் டைப்-சி போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. கார்போனியோ பிளாக், லூனா ஒயிட், டைட்டானியோ கிரே, உர்பானோ சில்வர் என நான்கு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது.

VLF Strada

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வசதிகள்

புதிய ஸ்ட்ரேடா ஸ்கூட்டரில் முன்புறம் 16 அங்குல சக்கரமும், பின்புறம் 14 அங்குல சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் பிரேக் பிடிக்கும்போது உதவும் சிபிஎஸ் (CBS) வசதி உள்ளது. ஆனால் ஏபிஎஸ் (ABS) வசதி வழங்கப்படவில்லை.

இருக்கையின் உயரம் 780 மிமீ ஆகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ ஆகவும் உள்ளது. ஸ்கூட்டரின் எடை 98 கிலோ என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் மற்றும் விடா நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுடன் வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா போட்டியிடும். விலை மட்டுமின்றி, பேட்டரி திறன், நடைமுறையில் கிடைக்கும் ரேஞ்ச், சார்ஜிங் வசதி, சர்வீஸ் மையங்கள் ஆகியவற்றையும் ஒப்பிட்டு வாங்குவது அவசியம்.

Also Read

முன்பதிவு மற்றும் டெலிவரி

வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சிட்டி வேரியண்ட்டுக்கு ரூ.999 புக்கிங் தொகையும், மேக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.1,999 தொகையும் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி வரும் நவம்பர் முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Tuesday, October 13, 2026, 21:30 [IST]
English summary
Vlf strada electric scooter launched india price 250km range features
மேலும்... #electric scooter #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X