பைக்குகளின் விலை கம்மி ஆகிடுச்சுனு சந்தோஷ படாதீங்க! கமுக்கமாக பைக்குகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) குறைப்பை பெறுவதற்காக அதன் 400சிசி பைக்குகளை 350சிசி பைக்குகளாக மாற்றி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பழைய 400சிசி பைக்குகளுக்கும், புதிய 350சிசி பைக்குகளுக்கும் இடையே என்ஜின் முக்கிய வேறுப்பாடாக உள்ளது. இதன் விளைவாக இன்னும் சில வேறுப்பாடுகளும் புதிய பைக் மாடல்களுக்கும், பழைய மாடல்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
என்ஜின்: டிரையம்பின் புதிய 350சிசி பைக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்ஜின் ஆகும். என்ஜின் சிஸ்டத்தில் போர் (Bore)-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக ஸ்ட்ரோக்கின் நீளத்தை குறைத்து என்ஜினை 350சிசி என்ஜினாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் வேகத்தில் சில வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. டிரையம்ப் நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு (Speed), ஸ்க்ராம்ப்ளர் (Scrambler), த்ரக்ஸ்டன் (Thruxton) மற்றும் டிராக்கர் (Tracker) பைக்குகள் 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதில், ஸ்பீடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில் என்ஜினின் அதிகப்பட்சமாக ஆற்றலை பெற என்ஜினை கூடுதலாக 500- 1000 ஆர்பிஎம் வேகத்தில் இயங்க வேண்டியிருக்கும். அதாவது, அந்த அளவிற்கு ஆக்ஸலரேஷன் (Acceleration)-ஐ கொடுக்க வேண்டும். ஆனால், த்ரக்ஸ்டன் மற்றும் டிராக்கர் பைக்குகளில் 8,750 ஆர்பிஎம்-லேயே அதாவது முன்பை விட 250 ஆர்பிஎம் குறைவான வேகத்திலேயே என்ஜின் அதன் அதிகப்பட்ச ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
இயக்க ஆற்றல்: என்ஜினின் அளவை சிறியதாக்கினால் அதற்கேற்ப அது வழங்கும் இயக்க ஆற்றலும் குறையும். அந்த வகையில், டிரையம்பின் இந்த புதிய 350சிசி பைக்குகளில் இயக்க ஆற்றல் ஆனது 2இல் இருந்து 3 எச்பி (குதிரையாற்றல்) வரை குறைந்துள்ளது. முந்தைய 398சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 40இல் இருந்து 42 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை இந்த பைக்குகளில் வழங்கிய நிலையில், புதிய 350சிசி மாடல்களில் 37 எச்பி- 40 எச்பி ஆக குறைந்துள்ளது.

எச்பி-ஐ விட என்ஜினின் டார்க் திறன் 5 என்.எம்-க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்தியாவில் டிரையம்ப் விற்பனை செய்யும் விலை குறைவான மோட்டார்சைக்கிளான ஸ்பீடு டி4 -இன் அதிகப்பட்ச என்ஜின் ஆற்றல் 29 எச்பி மற்றும் 31 என்.எம் டார்க் திறன் ஆக குறைந்துள்ளது. இது முன்பை விட 2 எச்பி மற்றும் 5 என்.எம் டார்க் திறன் குறைவாகும்.
எடை: மேற்கூறப்பட்ட பைக்குகளின் எடையில் டிரையம்ப் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. இருப்பினும், என்ஜினின் இயக்க ஆற்றல் குறைந்துள்ள காரணத்தினால் பைக்குகளின் பவர்-எடை விகிதம் மாறுப்பட்டுள்ளது. விலை குறைவான டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக்கின் பவர்-எடை விகிதம் ஆனது 172 எச்பி/டன்னில் இருந்து 161 எச்பி/டன் ஆக குறைந்துள்ளது.
அதேபோல், ஸ்பீடு 400 பைக்கின் பவர்-எடை விகிதம் 223 எச்பி/டன்னில் இருந்து 206 எச்பி/டன் ஆகவும், ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் 216 எச்பி/டன்னில் இருந்து 200 எச்பி/டன் ஆகவும், ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ்சி பைக்கில் 210 எச்பி/டன்னில் இருந்து 194 எச்பி/டன் ஆகவும், த்ரக்ஸ்டன் 400 பைக்கில் 229 எச்பி/டன்னில் இருந்து 218 எச்பி/டன் ஆகவும் குறைந்துள்ளது.
விலை: பைக்குகளின் என்ஜினின் குறைக்கப்பட்டு இருப்பதற்கு ஏற்ப அவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டு இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், பைக்குகளின் விலைகளில் பெரியதாக எந்த குறைப்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், விலை குறைவான ஸ்பீடு டி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) அப்படியே ரூ.1.95 லட்சமாக தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக, ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கின் விலை ரூ.2.70 லட்சத்தில் இருந்து ரூ.2.59 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
| Model | Old Price | New Price |
| Speed T4 | Rs 1.95 lakh | Rs 1.95 lakh |
| Speed 400 | Rs 2.39 lakh | Rs 2.32 lakh |
| Scrambler 400 | Rs 2.70 lakh | Rs 2.59 lakh |
| Scrambler 400 XC | Rs 2.97 lakh | Rs 2.90 lakh |
| Thruxton 400 | Rs 2.76 lakh | Rs 2.66 lakh |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 350சிசி-க்கு மேல் என்ஜின் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி-ஐ 28%-இல் இருந்து 40% ஆக மத்திய அரசு உயர்த்திய காரணத்தினால்தான் இவ்வாறு 350சிசி பைக்குகளை களமிறக்க டிரையம்ப் முடிவெடுத்து தற்போது அவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பைக்குகளின் என்ஜின், அவை வெளிப்படுத்தும் இயக்க ஆற்றல் மற்றும் பவர்-எடை விகிதங்கள் மாறியுள்ளதால் இந்த பைக்குகளை ஓட்டுவதிலும், ஹேண்ட்லிங் செய்வதிலும் நிச்சயமாக கவனிக்கத்தக்க வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








