பைக் அல்லது ஸ்கூட்டரில் இன்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்?: வாசகர் கேள்வி

பைக் பராமரிப்பில் முக்கியமான ஒரு அம்சம் இன்ஜின் ஆயில் மாற்றுவது. இன்ஜினை முழுமையான திறனுடன் இயங்கு வைப்பதில் இன்ஜின் ஆயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள் அதனை சரியான இடைவெளியில் மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்கள் நிறைய பேருக்கு எவ்வளவு இடைவெளியில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் என்ற சந்தேகமும் கேள்விகளும் நிறையவே இருக்கின்றன.

அப்படி சந்தேகத்தில் இருந்த வாடிக்கையாளர் ஒருவர் நம்முடைய யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கும், அவரைப் போன்ற பலருக்கும் இன்ஜின் ஆயில் தொடர்பான சந்தேகங்களைப் போக்கும் வகையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதனை முழுமையாகப் படித்தால், பின்னர் இன்ஜின் ஆயில் குறித்த சந்தேகமே உங்களுக்கு வராது. பகுதி பகுதியாக பிரித்தே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களுக்கு இன்ஜின் ஆயில் தொடர்பாக எங்கே சந்தேகம் இருக்கிறதோ, அந்தப் பகுதியை மட்டும் கூட நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

Engine Oil Change

இன்ஜின் ஆயில் எதற்கு?

முதலில் அடிப்படை கேள்வியில் இருந்து தொடங்குவோம், இன்ஜின் ஆயிலை எதற்குப் பயன்படுத்த வேண்டும்? இன்ஜின் என்பது பைக்கின் இதயம் போன்றது. ஒரு பைக் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சீராக இயங்க வேண்டியது அவசியம். பைக்கிலேயே இன்ஜின் தான் அதிகளவிலான நகரும் பாகங்களைக் கொண்டது. அதில் ஒரு பாகம் இயக்கத்தை நிறுத்தினாலும், பிரச்சினை தான்.

எனவே இன்ஜினின் எந்த பாகமும் இயக்கத்தை நிறுத்தாமல் சீராக தொடர வேண்டும் என்பதற்காகவே இன்ஜின் ஆயில் பயன்படுக்கிறது. முதலில் மேலே கூறியது போல நகரும் பாகங்களுக்கு இடையிலான உராய்வைக் குறைக்க இன்ஜின் ஆயில் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால், இன்ஜினால் சீராக இயங்க முடியாது. இது தான் இன்ஜின் ஆயிலை பயன்படுத்துவதற்கான முதற் மட்டும் முக்கியமான காரணம்.

Engine Oil Change

இரண்டாவது இன்ஜின் வேகமாக சூடாகிவிடும். அந்த வெப்பத்தைத் உள்வாங்கிக் குறைக்கும் வேலையையும் இன்ஜின் ஆயில் செய்து வருகிறது. மூன்றாவதாக இன்ஜினுள் தூசி, துகள் உள்ளிட்ட எதுவும் சேராமல் சுத்தமாக வைத்திருக்கும் வேலையும் இன்ஜின் ஆயில் சேர்த்தே செய்கிறது. இறுதியாக இன்ஜின் பாகங்கள் எதுவும் துருப்பிடிக்கால் இருக்கவும் இது உதவுகிறது.

ஏன் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்?

மற்ற எந்த பொருளையும் போலவே இன்ஜின் ஆயிலுக்கும் காலாவதி தேதி உண்டு. அதனை பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகி விடும். அப்படியென்றால், மேற்சொன்ன செயல்பாடுகளை அதனால் முழுமையாக நிறைவேற்ற முடியாது. எனவே தான் குறிப்பிட்ட பயன்பாட்டு இடைவெளியில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து இன்ஜின் ஆயிலை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.

எப்போது மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு பைக்கிற்கும் எவ்வளவு இடைவெளியில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் என்ற குறிப்புகள் அந்தந்த பைக்கிற்கான மேனுவலிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். மேனுவலில், சர்வீஸ் தொடர்பான பக்கத்தில், இன்ஜின் ஆயில் மட்டுமின்றி, பைக்கின் அனைத்து பாகங்களையும் எப்போது சோதனை செய்ய வேண்டும், எப்போது மாற்ற வேண்டும் என அனைத்து தகவல்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனினும் பொதுவாக 3,000 கிமீ முதல் 6,000 கிமீக்குள் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். பைக்கின் பயன்பாடு எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த இடைவெளி இருக்கும். 4,000 கிமீ முதல் 5,000 கிமீ என்ற சராரியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதிகம் பயன்படுத்தப்படாத பைக் என்றால் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மேலே கூறியது போல பைக்கின் மேனுவலை தொலைத்து விட்டாலும் பிரச்சினை இல்லை, அனைத்து பைக்குகளுக்கான மேனுவலையும் இணையத்தில் எளிதாகத் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பைக்கின் பெயரைப் போட்டு Service Manual என தேடினால் எளிதாகக் கிடைத்துவிடும். இல்லையெனில் இன்ஜின் ஆயிலை சோதனை செய்து மாற்ற வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.

எப்போது இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என எப்படி தெரிந்து கொள்வது?

நமக்குப் பசிக்கும் போது எப்படி அதுவாகவே தெரிகிறதோ, அதேபோலவே பைக்கிற்கு இன்ஜின் ஆயில் தேவைப்படுவதை அதன் செயல்பாடுகளை வைத்தும் கூறலாம். குறிப்பாக இன்ஜினில் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்தால் அல்லது கியர் மாற்றும் போது ஸ்மூத்தாக இல்லாததைப் போல நீங்கள் உணர்ந்தால் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என்று பொருள்.

பைக்கை நீங்கள் தொடர்ந்து ஓட்டும் போது உங்களுக்கே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இல்லாத உணர்வு ஏற்படும் அது தான், இன்ஜின் ஆயிலை மாற்றுவதற்கான சரியான நேரம். நீங்கள் நினைப்பது சரியா இல்லையா என்பதை இன்ஜினில் இருக்கும் இன்ஜின் ஆயிலை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து பைக்குகளிலும் இன்ஜின் ஆயிலுக்கான மூடி எளிதாக அனுகும் வகையிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். சிறிய கட்டிங் பிளேயரை வைத்து அதனை எளிதாக நாமே திறந்து விடலாம். சில பைக்குகளில் நாம் திறக்கும் அந்த மூடியுடனேயே இன்ஜின் ஆயிலை அளவிடும் கருவியையும் சேர்த்துக் கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் ஒரு ஸ்கேலை வைத்து எளிதாக அளக்கலாம்.

நீங்கள் அளக்கும் போது ஆயில் அடிமட்டத்தில் மிகவும் குறைவாக இருந்தால், அதனை மாற்ற வேண்டும் என்று பொருள். ஆயிலைப் போல இல்லாமல், கருமை நிறத்தில் இருந்தால், இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஸ்மூத்தாக இல்லாமல், கொஞ்சம் ஆயிலுக்கான கெட்டித்தன்மையை விட கொஞ்சம் அதிக கெட்டித்தன்மையைக் கொண்டிருந்தால், கண்டிப்பாக இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்.

எந்த இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்துவது?

இன்ஜின் ஆயிலேயே நிறைய வகைகள் இருக்கின்றன. அந்த டீயெலுக்கு நாம் போக வேண்டாம். உங்கள் பைக்கிற்கு ஏற்ற இன்ஜின் ஆயில் எது என்பது உங்கள் பைக்கின் மேனுவலிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பான்மையான நேரங்களில் அது பைக்கின் நிறுவனத்தின் பிராண்டு இன்ஜின் ஆயிலாகவே இருக்கும். ஹீரோ, டிவிஎஸ், யமஹா, ராயல் என்ஃபீல்டு என அனைத்து நிறுவனங்களுமே சொந்த இன்ஜின் ஆயிலையும் விற்பனை செய்கின்றன.

அதில் உங்கள் பைக்கிற்கு குறிப்பிடப்பட்டிருக்கும், அந்தக் குறிப்பிட்ட இன்ஜின் ஆயிலை மட்டுமே உங்கள் வாகனத்தில் பயன்படுத்த வேண்டும். பிராண்டு சர்வீஸ் செண்டர் என்றால் பிரச்சினையில்லை, வெளியே தனியாக மெக்கானிக் ஷாப் மூலம் செய்கிறீர்கள் என்றால் தேடிப் பிடித்து, உங்கள் பிராண்டு குறிப்பிட்டிருக்கும் இன்ஜின் ஆயிலை நீங்கள் தான் பார்த்து வாங்க வேண்டும்.

மறுபடியும், கூகுள் செய்தாலே மேனுவல் கிடைத்துவிடும், மேனுவலில் எந்த இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது வேறு பிராண்டின் இன்ஜின் ஆயிலை வாங்க நீங்கள் விருப்பப்பட்டாலும், மேனுவலில் இன்ஜின் ஆயிலின் பக்கத்தில் சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அது தான் இன்ஜின் ஆயில் கிரேடு எனச் சொல்வார்கள். வேறு பிராண்டிலும் அதே கிரேடு இன்ஜின் ஆயிலை வாங்குவதை உறுதி செய்யுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இன்ஜின் ஆயிலை தொடர்ந்து புறக்கணித்து வந்தீர்கள் என்றால் ஒரு நாள் இன்ஜினே ஓடாமல் சீஸ் ஆகும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் அதற்கு பல ஆண்டுகள் தொடர்ந்து அதனை நீங்கள் கவனிக்காமல் இருக்க வேண்டும். எனினும், பைக்கின் முழுத் திறனையும் பெற, இன்ஜின் சிறப்பாக செயல்படுவது முக்கியம். இன்ஜின் சிறப்பாக செயல்பட சரியான இன்ஜின் ஆயில் எப்போதும் இன்ஜினில் இருப்பது மிகவும் முக்கியம்.

Article Published On: Friday, June 19, 2026, 18:05 [IST]
English summary
When do we change engine oil and all related details answered in full user q a
மேலும்... #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out