புதிய 350சிசி பல்சர் வாங்குவதை விட இதுதான் பெஸ்ட்! ஷோரூம்களில் பைக் இன்னும் கொஞ்ச நாட்களுக்குதான் கிடைக்கும்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் விலையுயர்ந்த பல்சர் (Pulsar) பைக்கான பல்சர் என்.எஸ்400இசட் (Pulsar NS400Z)-ஐ 400சிசி என்ஜினுக்கு மாற்றாக 350சிசி என்ஜின் உடன் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST) சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, மற்ற பைக் நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இருப்பினும், புதிய 350சிசி பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலையை நிர்ணயிப்பதில் ஓர் சுவாரஸ்யமான விஷயம் நடைபெற உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

புதிய 350சிசி பஜாஜ் பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலையை பற்றி பார்ப்பதற்கு முன்னர், மத்திய அரசின் ஜிஎஸ்டி சலுகையை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். மத்திய அரசாங்கம் கடந்த 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை மாற்றியமைத்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

bajaj pulsar ns350z bike price

இதன் விளைவாக, பெரும்பாலான தயாரிப்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது; அதேநேரம் சில ஆடம்பர பொருட்களுக்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டது. அதன்படி, 350சிசி-க்கு மேல் என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி 28%-இல் இருந்து 40% ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, விலையுயர்ந்த டிரையம்ப் (Triumph), ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson), பி.எம்.டபிள்யூ (BMW) உள்ளிட்ட பைக்குகளின் விலைகள் அந்த சமயத்தில் அதிகரிக்கப்பட்டன.

அதேநேரம், 350சிசி அல்லது அதற்கு குறைவான சிசி என்ஜின் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 28%-இல் இருந்து 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டது. இதனால், பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலை குறைவான பைக்குகளின் விலைகள் மேலும் குறைந்தன. இதன் எதிரொலியாக, கடந்த ஆண்டு தீபாவளி (Diwali) சமயத்தில் அதிக பேர் புதிய பைக்குகளை வாங்கியதை பார்க்க முடிந்தது.

bajaj pulsar ns350z bike price

இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, பைக் நிறுவனங்கள் தங்களது 350சிசி-க்கு மேல் சிசி என்ஜின் கொண்ட பைக்குகளை 350சிசி என்ஜின் கொண்ட பைக்குகளாக மாற்றி வருகின்றன. டிரையம்ப் மற்றும் கேடிஎம் (KTM) அதன் 400சிசி பைக்குகளை 350சிசி-க்கு மாற்றி அறிமுகம் செய்ய தயாராகி வருவதற்கும் இதுவே காரணம். அதேபோல், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் அதன் விலையுயர்ந்த பல்சர் பைக்கான பல்சர் என்.எஸ்400இசட்-ஐ 350சிசி-க்கு மாற்றுகிறது.

இந்த நிலையில், 350சிசி-க்கு மாற்றப்படும் பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்துள்ளது. இந்த 400சிசி பல்சர் பைக் தற்சமயம் ரூ.1,93,900 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த பைக் 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட பின் ரூ.1,93,500-இல் இருந்து ரூ.1,93,898 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, பழைய விலைக்கும், புதிய விலைக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் ரூ.2-இல் இருந்து ரூ.400 வரையில் மட்டுமே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது; கிட்டத்தட்ட இரண்டும் விலைகளும் ஒன்றே. ஆனால், பைக்கின் என்ஜினின் திறன் 400சிசி-இல் இருந்து 350சிசி-க்கு குறைக்கப்படுகிறது. இருப்பினும், பைக்கின் விலை அதற்கேற்ப குறைக்கப்படாததற்கு, 400சிசி பைக்குகளுக்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்ட போது பஜாஜ் செய்துக்கொண்ட ஓர் உன்னதமான செயல்தான் காரணம் ஆகும்.

அது என்னவென்றால், 400சிசி பைக்குகளுக்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்ட போது அதன் பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலையை பஜாஜ் அதிகரிக்கவில்லை. ஜிஎஸ்டி உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை தானே சமாளித்துக் கொள்வதாக அந்த சமயத்தில் பஜாஜ் அறிவித்தது. இதனால், இந்த பைக்கை தற்போது 350சிசி-க்கு மாற்றும்போது அதற்கேற்ப விலையை குறைக்காமல் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துக்கொள்ள உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில், புதிய 350சிசி பல்சர் என்.எஸ்400இசட் பைக்கிற்கான விலை இதுதான் என்பதை 100% உறுதியாக சொல்ல முடியாது. நஷ்டத்தை ஈடு செய்வது தொடர்பான இவ்வாறான செய்திகளை பார்த்த பின் பஜாஜ் தனது முடிவை மாற்றிக் கொண்டு, குறைந்த விலையில் இந்த பைக்கை அறிமுகம் செய்யலாம்.

அல்லது பைக்கின் விலையை மாற்றாமல், கிட்டத்தட்ட அதே விலையில் இந்த புதிய பைக்கை பஜாஜ் அறிமுகம் செய்தாலும் அது வாடிக்கையாளர்களை கவரும் ஒன்றாகவே இருக்கும் என கருதுகிறோம். எப்படியிருந்தாலும், இந்த புதிய 350சிசி பைக் 'பல்சர் என்.எஸ்400இசட்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படாது. பல்சர் என்.எஸ்350இசட் அல்லது வேறு பெயருக்கு மாற்றப்படும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 13:54 [IST]
English summary
Why bajaj auto keeping prices of new 350cc pulsar ns400z unchanged check all details here
மேலும்... #bajaj auto #bajaj pulsar #pulsar ns
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+