ஆக்டிவாவை கதிகலங்க வைத்த தமிழ்நாட்டு தயாரிப்பு! 90 கிமீ மைலேஜ்! விலைல தரமட்டத்துக்கு இறங்கி அடிச்சிருக்காங்க!
இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியா (West Asia) பிராந்தியத்தில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) ஆகிய நாடுகளின் நடவடிக்கைகளால் உருவான போர்தான் (War), இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய வாகனங்களை இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்திய சந்தை என்பது ஏற்கனவே அதிக மைலேஜ் தரும் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய ஒன்றுதான். தற்போது அது இன்னும் அதிகமாகியுள்ளது.

இது அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களின் விற்பனை உயர்விற்கும் வழிவகுத்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் உயர்ந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவை 110 சிசி மற்றும் 125 சிசி ஆகியவை ஆகும். இவற்றின் மைலேஜ் முறையே சுமார் 60 மற்றும் 55 கிலோ மீட்டர்களாக உள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த அளவிற்கான மைலேஜ் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 2 வெர்ஷன்களிலும் 'ஐகோ அஸிஸ்ட்' (iGO Assist) தொழில்நுட்பம் டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இது எப்படி வேலை செய்யும் என்றால், நீங்கள் சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது பச்சை விளக்கிற்காக காத்து கொண்டிருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஐட்லிங்கில் இருந்தாலோ, டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தானாகவே ஆஃப் ஆகி விடும். நீங்கள் மறுபடியும் புறப்பட வேண்டும் என்றால், பிரேக்கை அப்ளை செய்து, ஆக்ஸலரேட்டரை லேசாக முறுக்கினால் போதும்.
எவ்வித தடையும் இன்றி உங்கள் பயணத்தை தொடரலாம். இந்த 'ஐகோ அஸிஸ்ட்' வசதி பெட்ரோல் நுகர்வை குறைத்து, அதிக மைலேஜ் கிடைக்க வழிவகை செய்கிறது. அத்துடன் டிவிஎஸ் ஜூபிடர் 110 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 என இரண்டு வெர்ஷன்களிலும் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
டிவிஎஸ் ஜூபிடர் 110 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 என 2 வெர்ஷன்களிலும், வாய்ஸ் அஸிஸ்ட் உடன் நேவிகேஷன், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப், ஸ்கூட்டரின் நிறுத்தும் திறனை அதிகரிக்கும் சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் முன் பகுதியில் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
அத்துடன் 2 வெர்ஷன்களிலும் முன் பகுதியில் வெளிப்புறத்தில்தான் பெட்ரோல் நிரப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பெட்ரோல் நிரப்பும்போது கீழே இறங்கி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில ஸ்கூட்டர்களில் இருக்கைக்கு அடியில் பெட்ரோல் நிரப்பும் வசதி வழங்கப்பட்டிருக்கும் என்பதால், ஒவ்வொரு முறையும் கீழே இறங்கி, இருக்கையை திறக்க வேண்டியிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், டிவிஎஸ் ஜூபிடர் 110 வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 78,550 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 92,310 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 86,890 ரூபாயாக உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 94,450 ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் ஜூபிடரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. தற்போது மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளதால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 1,24,767 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 97,606 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது இம்முறை 27,161 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 27.83 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters May 2026) டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஹோண்டா ஆக்டிவா வெறும் 20.05 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 27.83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படும் இந்த சிஎன்ஜி வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications