உலகிலேயே அதிக மைலேஜ் குடுக்கும் ஸ்கூட்டர்! அடிமாட்டு விலையில் களமிறக்க போகும் தமிழ்நாட்டு நிறுவனம்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும் விதிவிலக்கு அல்ல.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 1,24,771 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,05,834 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 18,937 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 17.89 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters March 2026), டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றாகும். இதன் பவர் அவுட்புட் 6,500 ஆர்பிஎம்மில் 5.9 kW பவர் ஆக உள்ளது.

இந்த வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 75,750 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 89,350 ரூபாய் ஆகவும் உள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் மற்றொரு வெர்ஷனில் 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச பவர் அவுட்புட் 6,500 ஆர்பிஎம்மில் 6.3 KW பவர் ஆக இருக்கிறது.
இந்த வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 83,390 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 92,950 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை கூடிய விரைவில் இன்னும் அதிகமாக போகிறது. சிஎன்ஜி வெர்ஷனின் வருகைதான் இதற்கு காரணம். உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதில், 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் நடப்பு 2026ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அனேகமாக வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உலகிலேயே மிகவும் அதிகமாக மைலேஜ் வழங்க கூடிய ஸ்கூட்டர்களில் ஒன்று என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி பெறும். ஆனால் இதன் விலை வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








