இந்த 110 சிசி ஸ்கூட்டரை கண்டிப்பா நீங்க வாங்கனும்.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வரும் 110 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்று டெஸ்டினி 110. ஹோண்டா ஆக்டிவா 110, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110 ஆகிய மற்ற 110 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர்.

மேலே கூறிய ஸ்கூட்டர் மாடல்களே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் ஸ்கூட்டர் மாடல்களாக இருந்து வருகின்றன. ஆனால் இவற்றை விட்டு விட்டு ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கு சில காரணங்களையும், தவிர்க்கலாம் என்றால் ஏன் தவிர்க்கலாம் என்பதற்கு சில காரணங்களையும் இங்கே நாம் பார்க்கலாம்.

Hero Destini 110

முதலில் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம். மிகவும் சிறப்பான சஸ்பென்ஷன் செட்டப்புடன் சாலைகளில் சொகுசான பயணத்தை வழங்கக்கூடிய ஸ்கூட்டராக டெஸ்டினி 110 இருக்கிறது. மோசமான சாலைகள், மேடு பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகள் என அனைத்தையும் எளிதாக கடக்க வைக்கிறது இதன் சஸ்பென்ஷன். டயர்கள் நல்ல கிரிப்புடன் இருக்கும் நிலையில், மிகவும் சொகுசான பயணத்தை நாம் இந்த ஸ்கூட்டரில் பெற முடியும்.

தற்போது நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடல்களிலேயே அதிக மைலேஜைத் தரக்கூடியதாக இந்த டெஸ்டினி 110 இருக்கிறது. நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் அதிகபட்சமாக லிட்டருக்கு 55 கிமீ வரையிலான மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 64 கிமீ முதல் 68 கிமீ வரையிலான மைலேஜையும் இந்த 110 சிசி ஸ்கூட்டர் கொடுப்பதாக இதனைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

Hero Destini 110

அனைத்து விதமான சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும் நிலையில், அனைவரும் வாங்கும் வகையில் சற்று குறைவான விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாகவே டெஸ்டினி 110 இருந்து வருவது மிக முக்கியமான காரணம். ரூ.72,000 என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த 110 சிசி ஸ்கூட்டரை நாம் வாங்க முடியும். அனைத்து வசதிகளையும் கொண்ட டாப் எண்டு வேரியன்டை ரூ.79,750 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நாம் வாங்கலாம்.

இது மற்ற முன்னணி 110 சிசி ஸ்கூட்டர்களை விட ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் கடந்து மிகவும் ஸ்டைலான ஒரு ஸ்கூட்டர் மாடல் இந்த டெஸ்டினி 110 என்பதை நாம் யாருமே மறுக்க முடியாது. நியோ ரெட்ரோ ஸ்டைலில் பார்த்தவுடன் கண்களைக் கவரும் வகையிலான டிசைனை இந்த ஸ்கூட்டர் மாடல் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்கூட்டரை தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கான சில காரணங்களைப் பார்க்கலாம். குறைவான விலை என்று சொல்லும் போதே சில இடங்களில் குறைபாடுகள் இருக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த ஸ்கூட்டரின் ஃபிட் அண்டு ஃபினிஷ் அனைத்து இடங்களிலும் சிறப்பாக இருக்கும் எனக் கூற முடியாது. மற்ற முன்னணி ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது குறைவான விலை கொண்ட ஸ்கூட்டர் என்பதை சில இடங்களில் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

தற்போது பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டாப் எண்டு வேரியன்ட்களில் முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த டெஸ்டினி 110 ஸ்கூட்டரில் டிஜி அனலாக் டிஸ்பிளேவையே ஹீரோ கொடுத்து வருகிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்களையும் நாம் மிஸ் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் இந்த ஸ்கூட்டரை தவிர்ப்பதற்கான ஒரு காரணமாக அமைகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தவிர்ப்பதற்கான காரணங்களைக் கடந்து பட்ஜெட் விலையில் வாங்குவதற்கு இதுவொரு சிறப்பான ஸ்கூட்டர் என்றே நாங்கள் கருதுகிறோம். மேலும், பார்த்தவுடன் மிகவும் கவர்ச்சிகரமான டிசைனைக் கொண்ட ஸ்கூட்டராகவும் இந்த டெஸ்டினி 110 இருக்கிறது. இந்த நியோ ரெட்ரோ ஸ்டைலுக்காகவே கூட இந்த ஸ்கூட்டரை ஒருமுறை வாடிக்கையாளர்கள் முயற்சி செய்யலாம். பெர்ஃபாமன்ஸில் எந்தக் குறையும் இல்லை என்பதால், இதனையும் வாடிக்கையாளர்கள் பரிசீலனையில் வைத்துக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 5, 2026, 9:54 [IST]
English summary
Why you should and should not buy hero destini 110 scooter check all details here
மேலும்... #hero motocorp #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+