ஒரே மாதத்தில் யமஹாவை உச்சிக்கு கொண்டு சென்று நிறுத்திய பைக்! விலையும் அந்த அளவுக்கு கம்மி கிடையாதே...!!

கடந்த டிசம்பர் மாதம் யமஹா (Yamaha) நிறுவனம், இந்திய சந்தையில் மொத்தம் 54,914 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முக்கியமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2024ஆம் ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 36,780 யமஹா இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 49.3% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியாகும்.

இந்த விற்பனை உயர்வுக்கு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.எஸ்.ஆர் 155 (XSR 155) பைக்கின் அறிமுகம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2025 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நியோ-ரெட்ரோ ரக பைக் முதல் முழு விற்பனை மாதமான டிசம்பரில் மட்டும் 14,951 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

yamaha xsr155 as highest selling model in december 2025

இது யமஹாவின் மொத்த உள்நாட்டு விற்பனையில் கால் பங்கிற்கும் அதிகமானதாகும். இதேபோல், ரே இசட்.ஆர் (Ray ZR) ஸ்கூட்டர் 14,153 யூனிட்கள் விற்பனையாகி, தொடர்ந்து வலுவான விற்பனையைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இது 2024 டிசம்பரில் விற்கப்பட்ட 12,002 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் 17.92% குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியாகும்.

விற்பனையில் மூன்றாவது இடத்தை எஃப்.இசட் (FZ) சீரிஸ் பிடித்துள்ளது. எஃப்.இசட் பைக்குகள் கடந்த டிசம்பரில் 10,291 யூனிட்கள் விற்கப்பட்டு, 2024 டிசம்பரில் விற்கப்பட்ட 8,558 யூனிட்களை விட 20.25% ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இவற்றுடன், யமஹாவின் செயல்திறன் சார்ந்த மாடல்களும் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளன. ஆர்15 (R15) என்கிற யமஹாவின் சூப்பர்போர்ட் பைக் 5,453 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

yamaha xsr155 as highest selling model in december 2025

இது 2024 டிசம்பரில் விற்கப்பட்ட 4,269 யூனிட்களை விட 27.73% அதிகரிப்பாகும். இருப்பினும், பிரீமியம் ரக ஆர்3 (R3) மற்றும் எம்டி-03 (MT-03) பைக் மாடல்கள் 4 யூனிட்டுகளில் இருந்து வெறும் 2 யூனிட்டுகளாகக் குறைந்து, எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்கவில்லை. அதேவேளையில், யமஹாவின் சில பிரபலமான மாடல்களும் கடந்த மாதத்தில் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன.

ஃபேஸினோ (Fascino) விற்பனை 5,475 யூனிட்டுகளில் இருந்து 4,630 யூனிட்டுகளாக 15.43% சரிந்துள்ளது. எம்டி-15 பைக் விற்பனை 15.72% சரிந்து 4,403 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. ஏரோக்ஸ் (Aerox) ஸ்கூட்டரின் விற்பனையும் 17.39% சரிந்து 1,031 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், XSR 155 மாடலின் அபரிமிதமான விற்பனை, யமஹா நிறுவனம் டிசம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்து 2025ஆம் ஆண்டை வெற்றியுடன் முடிக்க உதவியது.

yamaha xsr155 as highest selling model in december 2025

எக்ஸ்.எஸ்.ஆர் 155, 2025 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 155 சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்டது. யமஹாவின் வேரியபிள் வால்வு ஆக்டுவேஷன் (VVA) தொழில்நுட்பத்துடன் வரும் இந்த என்ஜின், அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 18.1 பிஹெச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.2 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

இந்த என்ஜின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவையும் இதில் நிலையான அம்சங்களாகும். ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகளில் உள்ள யமஹாவின் டெல்டா பாக்ஸ் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த பைக்கில், 17 இன்ச் அலாய் சக்கரங்கள், USD முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றன.

yamaha xsr155 as highest selling model in december 2025

பிரேக் சிஸ்டத்தை பொறுத்தவரை, 282 மிமீ முன் டிஸ்க் மற்றும் 220 மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக்குகள் இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்புடன் வருகின்றன. வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கண்ணீர்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், பிளாட் சிங்கிள்-பீஸ் சீட் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதன் டிசைன் சிறப்பம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் விற்பனையில் போட்டியாக ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகிய மாடல்கள் இருப்பினும், யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் துவக்கத்திலேயே சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்தியர்கள் நீண்ட காலமாக அறிமுகம் செய்ய கோரிக்கை விடுத்துவந்த இந்த பைக்கிற்கு எதிர்பார்த்தப்படி நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 27, 2026, 10:19 [IST]
English summary
Xsr155 that immediately emerged as the highest selling yamaha model in india
மேலும்... #yamaha #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X