யமஹாவின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முதல் மாடலை விட சிறந்ததா?

யமஹா நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக புதிய ஏரோக்ஸ்-இ (Aerox-E) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. சுமார் ரூ.2.82 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது இந்தியாவின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மிகவும் ஸ்டைலான தோற்றம்
பெட்ரோல் என்ஜின் உடனான யமஹா ஏரோக்ஸ் ஏற்கனவே அதன் ஸ்டைலிஷான தோற்றத்தினால் பலரை வெகுவாக கவர்ந்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட அதே டிசைனில் புதிய ஏரோக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரட்டை-LED ஹெட்லைட், ஷார்ப்பான டிசைனிலான ஏரோடைனாமிக்ஸ் மற்றும் மஸ்குலரான பாடிவொர்க் உள்ளிட்டவை புதிய ஏரோக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டுள்ளது.

yamaha aerox-e electric scooter important specifications

மேம்படுத்தப்பட்ட செயல்படுதிறன்
புதிய ஏரோக்ஸ்-இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பவர் பூஸ்ட் டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளது. இது விரைவான ஆக்ஸலரேஷனை வழங்குவதால், இது நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சடர்ன் ஓவர்டேக்குகளை செய்தப்படி ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கும். அத்துடன், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கோ, ஸ்டாண்டர்ட் மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிநவீன பவர்டிரெயின்
ஏரோக்ஸ்-இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீக்கக்கூடிய 3kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இதனை ஸ்கூட்டரில் இருந்து தனியாக கழற்றி வெளியே எடுக்க முடியும். 1.5kWh திறன் கொண்ட இரு பேட்டரி செல்கள் இந்த பேட்டரி பேக்கில் இடம்பெற்றுள்ளன. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 117கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

yamaha aerox-e electric scooter important specifications

இந்த பேட்டரி பேக் பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 9.4 கிலோவாட்ஸ் ஆற்றல் மற்றும் 48 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 95.5கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 3 மணிநேரம் 10 நிமிடங்களில் 0-இல் இருந்து 100% சார்ஜ் நிரப்பிவிடலாம்.

பிரீமியம் தொழிற்நுட்பம்
ரைடிங் மோட்கள் மட்டுமின்றி, ஏரோக்ஸ்-இ ஸ்கூட்டரில் பிரீமியம் தரத்தில் சில சவுகரிய அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இதன்படி, வண்ண TFT கன்சோல் திரை, சாலையில் சிறந்த பிடிமானத்திற்கு டிராக்‌ஷ்ன் கண்ட்ரோல் சிஸ்டம், Y-கனெக்ட் செயலி வாயிலாக ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் கீ உள்ளிட்டவை அடங்குகின்றன.

கூடுதல் சவுகரியம்
கூடுதல் சவுகரியத்திற்காக இரு நிலைகளில் இருக்கைகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பின் இருக்கையில் அமர்பவர்கள் நன்கு உயரத்தில் இருந்து பயணத்தை அனுபவிக்கலாம். வளைவுகளில் திரும்புவதற்கு ஏதுவாக அகலமான டயர்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டரை சுற்றிலும் வழங்கப்படும் விளக்குகள் அனைத்தும் LED தரத்திலானவை ஆகும்.

ஸ்கூட்டரில் இருந்து வெளியே எடுக்கப்படும் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக பிரத்யேகமான டக் சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் பின்பக்க சஸ்பென்ஷன் வழக்கத்தை விடவும் நன்கு உயரமாக பொருத்தப்பட்டுள்ளதால், கரடுமுரடான சாலைகளிலும் குலுக்கல்கள் இல்லாத பயணத்தை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஏரோக்ஸ் பெட்ரோல் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.44 லட்சத்தில் இருந்து துவங்கும் நிலையில், புதிய ஏரோக்ஸ்-இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட டபுள் மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை இவ்வளவு அதிகமாக இருப்பினும், ஸ்டைலான தோற்றத்திற்காகவே யமஹாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Friday, July 10, 2026, 6:25 [IST]
English summary
Yamaha aerox e electric scooter important specifications
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out