யமஹாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏராக்ஸ் E (AeroxE) ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது யமஹா. அந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஏராக்ஸ் 155 எரிபொருள் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வடிவமாக இந்த ஏராக்ஸ் E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது. மேலும், யமஹாவின் முதல் சொந்தத் தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இதனை நாம் சொல்லலாம்.

ஏற்கனவே EC-01 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வந்தாலும், அதனை யமஹாவிற்காக இந்தியாவைச் சேர்ந்த ரிவர் மொபிலிட்டி என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமே உருவாக்கியது, அந்நிறுவனமே தயாரித்தும் வருகிறது. ஆனால் ஏராக்ஸ் E எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது முழுவதுமாக யமஹாவின் சொந்தத் தயாரிப்பு என்று நாம் சொல்லலாம்.

Yamaha Aerox E

யமஹா ஏராக்ஸ் E: எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு

இந்த பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு 1.5 kWh (மொத்தமாக 3 kWh) ரிமூவபிள் பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது யமஹா. இந்த இரண்டு பேட்டரி பேக்குகளுடன் 117 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த ஏராக்ஸ் E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 9.4 kW பவர் மற்றும் 48 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த பவர்ட்ரெயினின் உதவியுடன் அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.

Yamaha Aerox E

யமஹா ஏராக்ஸ் E: பிற அம்சங்கள்

எக்கானமி, ஸ்டாண்டர்டு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோடுகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா கொடுத்துள்ளது. இதனைக் கொண்டு பயணத்தின் தன்மைக்கு ஏற்ப அதிக ரேஞ்சு வேண்டுமா அல்லது அதிக பவர் வேண்டுமா என்பதனை வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம். ட்ராக்ஷன் கண்ட்ரோல் அம்சத்தைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோடும் உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முழுமையான கலர் TFT டிஸ்பிளேவைக் கொடுத்துள்ளது யமஹா. இந்த டிஸ்பிளே மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்கள் ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அனைத்தும் LED விளக்குகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கீலெஸ் இக்னிஷன் வசதியைக் கொடுத்துள்ளது யமஹா. இதற்கான கீ ஃபாபைப் பயன்படுத்தி ஆன்ஸர் பேக் வசதியையும் நாம் பயன்படுத்த முடியும்.

பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை .யமஹா கொடுத்துள்ளது. இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், பிரேக்கிங்கிற்காக இரண்டு பக்கமும் டிஸ்க்குகளே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 139 கிலோ எடையையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ரொம்பவே அதிகமாக 2.82 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது யமஹா. பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று குறிப்பிட்டாலும், அதில் குறிப்பிடுவது போல பெர்ஃபாமன்ஸ் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இதன் விலைக்கேற்ற பெர்ஃபாமன்ஸ்.

ஆனால் பார்ப்பதற்கு ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் டிசைனை அப்படியே ஏராக்ஸ் E-யிலும் யமஹா கொண்டு வந்திருக்கிறது. டிசைன் ஓகே தான். ஆனால் உள்ளடக்கம் போதுமான அளவில் இல்லையோ எனத் தோன்றுகிறது. ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். ஆனால் விலைக்கேற்ற ஸ்கூட்டராக இல்லையோ எனத் தோன்றுகிறது. இந்த ஸ்கூட்டர் விலைக்கு வொர்த்தானதா என்பதை இதனை ஓட்டிப் பார்த்த பின்பு ரிவ்யூவில் பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1 லட்சம் ரூபாய் விலைக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும் ரேஞ்சு மற்றும் பவர்ட்ரெயினையே இந்த யமஹா ஏராக்ஸ் E கொண்டிருக்கிறது. ஆனால் விலை அதனை விட மும்மடங்கு இருக்கிறது. இதனை விட குறைவான விலைக்கு 310 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சைக் கொடுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்திய சந்தையில் நாம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, July 8, 2026, 12:46 [IST]
English summary
Yamaha aerox e electric scooter launched in india
மேலும்... #yamaha #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out