சுஸுகிக்கு சவால்விடும் யமஹாவின் புதிய ஸ்கூட்டர்! ஆர்15 பைக்கின் அதே 155சிசி என்ஜின் உடன்!

யமஹா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக புதிய என்மேக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யமஹாவின் பிரீமியம் தரத்திலான மேக்ஸி-ஸ்கூட்டராக விளங்கும் என்மேக்ஸ் 155 ஆனது சில ஐரோப்பிய மற்றும் இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் நிலையில், விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் யமஹா நிறுவனம் அடுத்ததாக ஆர்2 என்கிற ஆர்15 போன்ற புதிய பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. ஆர்15 பைக்கை காட்டிலும் 200சிசி என்ஜின் உடன் பவர்ஃபுல்லான ஸ்போர்ட்ஸ் பைக்காக ஆர்2 அறிமுகம் செய்யப்படுகிறது. இதனுடன் சேர்த்து என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

yamaha nmax 155 maxi-scooter

இந்த 2026ஆம் ஆண்டில் யமஹா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இசி-06 -ஐ அறிமுகம் செய்த நிலையில், மற்றொரு ஸ்கூட்டராக என்மேக்ஸ் 155 களமிறக்கப்படுகிறது. வெளிநாடுகளில் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆனது தினசரி பயணங்களுக்கு ஏற்றதாகவும், சவுகரியம் மற்றும் செயல்படுதிறனில் சிறந்ததாகவும் விளங்குகிறது. இது அளவில் பெரியதான மேக்ஸி-ஸ்கூட்டர் வகையை சேர்ந்தது ஆகும்.

இவ்வாறான மேக்ஸி-ஸ்கூட்டராக யமஹா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது. இருப்பினும், மற்றொரு மேக்ஸி-ஸ்கூட்டராக என்மேக்ஸ் 155 களமிறக்கப்படுகிறது. நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்கும் இந்த ஸ்கூட்டர் ஏற்றதாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 155சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

yamaha nmax 155 maxi-scooter

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎச்பி மற்றும் 14 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. உலகிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் பவர்ஃபுல்லான மேக்ஸி-ஸ்கூட்டராக யமஹா என்மேக்ஸ் 155 விளங்குகிறது. மேலும் இதன் காரணமாகவே, உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் யமஹா ஸ்கூட்டராகவும் என்மேக்ஸ் 155 விளங்குகிறது.

மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்படும் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் அதற்கு இணையாக மிகவும் சவுகரியமான இருக்கை அமைப்பு கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுக்கும் எந்த குறையும் இல்லை. ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடிய 4.2-இன்ச் TFT டிஸ்பிளே ஆனது வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பயணத்திற்கான வழிக்காட்டியை திரையிலேயே பெறலாம்.

இதனுடன், சுற்றிலும் LED விளக்குகள், டபுள்-சேனல் ABS, டிஸ்க் பிரேக்குகள், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள், ஹேண்டில்பாரில் ஸ்விட்ச் கண்ட்ரோல்கள் மற்றும் ஸ்மார்ட் கீ சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்த புதிய யமஹா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை தற்போதைய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1.43 லட்சமாக உள்ளது. இதனை காட்டிலும் அதிகம் என்றால், ரூ.1.50 லட்சம் அளவில் என்மேக்ஸ் 155 அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் விற்பனையில் இந்த புதிய யமஹா ஸ்கூட்டருக்கு சுஸுகி பர்க்மேன் 125, யமஹா ஏரோக்ஸ் 155, ஏப்ரிலியா SXR160 மற்றும் ஹீரோ ஸூம் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் போட்டியாக விற்பனையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஏற்கனவே ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை விற்பனை செய்துவரும் யமஹா நிறுவனம் புதியதாக மேலும் ஒரு மேக்ஸி-ஸ்கூட்டராக என்மேக்ஸ் 155-ஐ களமிறக்குகிறது. இந்த வகை ஸ்கூட்டர்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், அதனை என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் மூலம் யமஹா முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Article Published On: Wednesday, June 3, 2026, 16:00 [IST]
English summary
Yamaha could introduce nmax 155 maxi scooter in india rival to suzuki burgman
மேலும்... #yamaha #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out