பவர்ஃபுல்லான புதிய 125 சிசி ஸ்கூட்டரை வெளியிடும் யமஹா

யமஹா நிறுவனமானது சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டரான சிக்னஸ் X-ன் சிறப்பு எடிஷன் ஒன்றை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. உலகம் முழுவதும் யமஹா விற்பனை செய்து வரும் ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டர் சிக்னஸ் X. அந்நிறுவனத்தின் சொந்த நாடான ஜப்பானிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டிலேயே இதன் சிறப்பு எடிஷனை யமஹா வெளியிடவுள்ளது.

ஆகஸ்ட் 25ம் தேதியன்று சிக்னஸ் X (Cygnus X) ஸ்கூட்டரின் சிறப்பு எடிஷனை ஜப்பானில் யமஹா வெளியிடுகிறது. சர்வதேச அளவில் யமஹாவின் பவர்ஃபுல்லான பைக்காக R1M உள்ளது. லிட்டர் கிளாஸ் பைக்காக 1000 சிசி இன்ஜின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெர்ஃபாமன்ஸ் பைக்கின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் நிறத்தைக் கொண்டிருக்கும் வகையில் புதிய சிக்னஸ் X ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது யமஹா.

Yamaha Cygnus X R1M Edition

சிறப்பு எடிஷன் என்பதால் மிகவும் குறைவான அளவிலேயே இந்த சிக்னஸ் X R1M எடிஷன் ஸ்கூட்டர் தயாரிக்கப்படவுள்ளது. குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், வெறும் 800 யூனிட்டுகள் தான். அந்த வகையில் இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவே இருக்கும். இந்திய மதிப்பிற்கு 2.17 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்த சிறப்பு எடிஷன் சிக்னஸ் X ஸ்கூட்டரை ஜப்பானில் விற்பனை செய்யவுள்ளது யமஹா.

மெக்கானிக்கலாகவோ, வசதிகள் ரீதியாகவோ ஸ்டாண்டர்டான சிக்னஸ் X ஸ்கூட்டரில் இருந்து இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் இருக்காது. காஸ்மெடிக் அளவிலேயே மாற்றங்கள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் R1M பைக்கின் தனித்துவமான மேட் டைட்டானியம் ஃபினிஷை இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரும் கொண்டிருக்கும். இது கார்பன் ஃபைபர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.

Yamaha Cygnus X R1M Edition

இது தவிர சூடு போன்ற சீட்டிங் பேக்கேஜ், இரண்டு வீல்களிலும் கோல்டன் நிற பிரேக் காலிப்பர்கள் மற்றும் மஞ்சள் நிற ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப் ஆகிய காஸ்மெடிக் மாற்றங்களை ஸ்டாண்டர்டு ஸ்கூட்டரில் இருந்து தனித்துவமாக இந்த ஸ்பெஷல் எடிஷன் சிக்னஸ் X ஸ்கூட்டர் கொண்டிருக்கும். இது தவிர வேறெந்த மாற்றங்களும் இல்லை.

மெக்கானிக்கலாக ஸ்டாண்டர்டு சிக்னஸ் X ஸ்கூட்டரில் இருக்கும் அதே 124 சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜினானது 12 hp பவர் மற்றும் 11 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும். அந்த வகையில் மிகவும் பவர்ஃபுல்லான 125 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாக கண்டிப்பாக இதனை நாம் கூறலாம்.

அனைத்து விளக்குகளும் LED-யாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த 125 சிசி ஸ்கூட்டரில், LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் USB சார்ஜர் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தற்போது ஃபேஸினோ 125 மற்றும் ரேஸிஆர் 125 ஆகிய 125 சிசி ஸ்கூட்டர்களையே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிக்னஸ் X உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் ஸ்போர்ட்டியான, நல்ல பெர்ஃபான்ஸைக் கொடுக்கக் கூடியவையாக இருந்தாலும், இந்தியா போன்ற பட்ஜெட் ஆட்டோமொபைல் சந்தைகளில் இந்த லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களை அதிக விலையில் நிறைய வாடிக்கையாளர்களை சென்றடையுமா என்பது கேள்விக் குறி தான். எனவே தான் இது போன்ற பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிட யமஹா போன்ற நிறுவனங்கள் தயங்கி வருகின்றன.

Article Published On: Tuesday, July 14, 2026, 17:00 [IST]
English summary
Yamaha cygnus x r1m edition 125 cc scooter to be launched soon
மேலும்... #yamaha #scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out