களத்தில் இறங்கிய ஜப்பான் இன்ஜினியர்கள்! டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்களுக்கு எமனாக மாறிய யமஹா!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய 'டிமாண்ட்' இருந்து வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்திய சந்தையில் ஏராளமான புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த வரிசையில் ஜப்பானை சேர்ந்த யமஹா (Yamaha) நிறுவனமும் தற்போது இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்துள்ளது. யமஹா நிறுவனம் இசி-06 (EC-06) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதான் இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 169 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான ரைடிங் ரேஞ்ச் (Riding Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில் யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 79 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய கூடியதாக இருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 6.7 kW பவரையும், 26 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 ரைடிங் மோடுகள் (Riding Modes) வழங்கப்பட்டுள்ளன. அவை ஈக்கோ, ஸ்டாண்டர்டு மற்றும் பவர் ஆகியவை ஆகும். இதுதவிர 'ரிவர்ஸ் மோட்' ஒன்றும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 சக்கரங்களிலும் 200 மிமீ டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காம்பி பிரேக் சிஸ்டத்தையும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
மேலும் வேகம், பேட்டரியின் நிலை மற்றும் ரேஞ்ச் போன்ற தகவல்களை காட்டும் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஹெல்மெட் போன்ற பொருட்களை வைத்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் இடவசதி போன்ற அம்சங்களும் யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி (Warranty) வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ப்ளூயிஷ் ஒயிட் என்ற ஒரே ஒரு கலர் ஆப்ஷனில் (Colour Option) மட்டுமே யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.
யமஹா இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,67,600 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக யமஹா இசி-06 கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம், யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்திய சந்தையில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யமஹா விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








