அடிமாட்டு விலையில் புதிய ஸ்கூட்டர் மாடலை களமிறக்கிய நிறுவனம்.. வசதிகள் எல்லாம் அள்ளுது!

மேம்படுத்தப்பட்ட 'ஃபேஸினோ 125 ஹைபிரிட்' (Fascino 125 Hybrid) ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது யமஹா. இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பக்கூடிய ஸ்டைலான 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இந்த ஃபேஸினோ 125 இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியது யமஹா. அப்போது இந்த ஃபேஸினோ ஸ்கூட்டரின் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. தற்போது அப்டேட்டுடன் விலையும் உயர்ந்திருக்கிறது.

புதிய ஃபேஸினோ 125 சிசி ஸ்கூட்டரில் கவனிக்கத்தக்க சில டிசைன் மாற்றங்களைச் செய்துள்ளது யமஹா. அதை தவிர்த்து வசதிகளிலோ அல்லது மெக்கானிக்கலாகவோ புதிய ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்ற தெரிகிறது. புதிய ஃபேஸினோ 125 ஸ்கூட்டர் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

Yamaha Fascino

முகப்புப் பக்கம் மற்றும் சைடு பேனல்களின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு விற்பனை செய்யப்பட்ட அதே ஸ்கூட்டர் போலவே தான் இருக்கிறது. பின்பக்கம் தான் சற்று ஸ்டைலாக மாறியிருக்கிறது புதிய ஃபேஸினோ. முன்னர் பின்பக்க விளக்கு மற்றும் இன்டிகேட்டர்கள் எல்லாம் சேர்த்து ஒன்றாகக் கொடுக்கப்பட்டிருக்கும். புதிய ஸ்கூட்டரில் பின்பக்க விளக்கு தனியாக மற்றும் இன்டிகேட்டர்கள் தனியாக என வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் புதிய டிசைன் பார்ப்பதற்கு கிளாஸியாகவும், ஸ்டைலாகவுமே இருக்கிறது, முந்தைய டிசைனுடன் ஒப்பிடும் போது. இந்த புதிய விளக்குகளின் இடமாற்றத்திற்கு ஏற்ப பேனலையும் கொஞ்சம் மறுவடிவமைப்பு செய்துள்ளது யமஹா. முன்பைப் போல அதிக வளைவுகளுடன், ஷார்ப்பாக இல்லாமல், ஸ்மூத்தாக இருக்கிறது புதிய பேனல்.

Yamaha Fascino 125

இந்த ஒரு மாற்றத்தைத் தவிர, புதிய யமஹா ஃபேஸினோ 125 ஸ்கூட்டரில் வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாக இன்ஜினிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே போல விலையிலும் பெரியளவில் மாற்றம் இல்லை, சில ஆயிரங்கள் மட்டுமே கூடியிருக்கிறது. முந்தைய ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருந்த அடிப்படை அம்சங்கள் முதல் ஹைபிரிட் தொழில்நுட்பம் வரை அனைத்தும் புதிய ஸ்கூட்டரிலும் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன.

இன்ஜினும் அதே 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான். இது 8.2 hp பவர் மற்றும் 10.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்காக இண்டகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவில் எலெக்ட்ரிக் பூஸ்ட்டைக் கொடுக்கிறது. கூடுதல் மைலேஜ் பெறுவதற்காக ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பமும் உள்ளது.

டிரம், டிஸ்க் மற்றும் S என மூன்று வேரியன்ட்களாக புதிய ஃபேஸினோ 125 ஸ்கூட்டரை நாம் வாங்கலாம். இதில் டாப் எண்டான S வேரியன்டில் TFT டிஸ்பிளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையான டிரம் வேரியன்டை ரூ.76,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டிஸ்க் மற்றும் S வேரியன்ட்களை முறையே ரூ.88,000 மற்றும் ரூ.92,200 என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளிலும் வெளியிட்டுள்ளது யமஹா.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அடிப்படை வேரியன்டின் விலை மட்டுமே ரூ.1,600 வரை உயர்ந்திருக்கிறது. இடைநிலை டிஸ்க் வேரியன்டின் விலை ரூ.900 வரையில் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், டாப் எண்டான S வேரியன்டின் விலையில் முந்தைய மாடல் ஃபேஸினோ 125 ஸ்கூட்டருக்கும் புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடலுக்கும் இடையே எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வேரியன்ட்களுமே அதனதற்கு தனித்துவமான நிறத் தேர்வுகளைக் கொண்டுள்ளன. அடிப்படை டிரம் வேரியன்டை மெட்டாலிக் பிளாக, விவிட் ரெட் மற்றும் மெட்டாலிக் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் வாங்கலாம். டிஸ்க் வேரியன்டானது மெட்டாலிக் லைட் கிரீன், கூல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் டார்க் மேட் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டுள்ளது. டாப் எண்டு S வேரியன்டை மேட் பிளாக் ஸ்பெஷல் மற்றும் மேட் கிரே ஸ்பெஷல் என இரண்டு தனித்துவமான நிறங்களில் நாம் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கொஞ்சம் குறைவான விலையில் நிறைவான வசதிகளுடன் கிடைக்கக்கூடிய 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களில் இந்த ஃபேஸினோவும் ஒன்று. குறைவான விலை என்றாலும், பார்ப்பதற்கு ப்ரீமியமான லுக்கை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கும். ஓட்டும் போது ஒரு ஸ்கூட்டரை ஓட்டுவதைப் போன்ற உணர்வையே கொடுக்காது. அக்சஸ், ஜூப்பிட்டர் 125, ஆக்டிவா 125 மற்றும் டெஸ்டினி 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படுகிறது இந்த ஃபேஸினோ 125.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 16:29 [IST]
English summary
Yamaha fascino 125 hybrid updated scooter launched in india at fascinating price
மேலும்... #yamaha #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+