70 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்.. இப்போ அடி மாட்டு விலையில விக்கிறாங்க!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் மிகவும் கிளாஸியான டிசைன் கொண்ட மாடல்களில் ஒன்றாக யமஹாவின் ஃபேஸினோவைக் கூறலாம். சமீபத்தில் தான் இந்த ஸ்கூட்டரை யமஹா அப்டேட் செய்தது. அப்டேட் செய்யப்பட்ட போது அதன விலையையும் உயர்த்தியிருந்தது யமஹா. தற்போது மீண்டும் இந்த ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியுள்ளது.

இந்த 125 சிசி ஸ்கூட்டர் மாடலினை டிரம், டிஸ்க் மற்றும் S என மூன்று வேரியன்ட்களாக யமஹா விற்பனை செய்து வருகிறது. TFT டிஸ்பிளே வசதி கொண்ட டாப் எண்டான S வேரியன்ட் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட டிஸ்க் வேரியன்ட் ஆகிய இரண்டின் விலை மட்டுமே தற்போது 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

Yamaha Fascino

இந்த விலை உயர்விற்குப் பின்பாக டாப் எண்டு ஃபேஸினோ S வேரியன்டை ரூ.96,200 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், இடைநிலை டிஸ்க் வேரியன்டை ரூ.89,000 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அடிப்படையான டிரம் வேரியன்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ரூ.75,000 என்ற மிகவும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.

இப்போது ஒரு ஸ்கூட்டர் வாங்க முடிவெடுக்கிறீர்கள் என்றால் கூட இந்த ஃபேஸினோ 125 ஸ்கூட்டரையும் பரிசீலனை செய்யலாம். இந்த ஸ்கூட்டரில் 8.2 hp பவர் மற்றும் 10.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

Yamaha Fascino

இந்த இன்ஜினுடன் ஃபேஸினோ 125 ஸ்கூட்டரில் யமஹாவின் ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டாப்/ ஸ்டார்ட் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இந்த 125 சிசி ஸ்கூட்டர் உள்ளது. சைலண்ட் ஸ்டார்ட் வசதி இருப்பதால், ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது அதிக சத்தம் வராமல் ஸ்மூத்தாக இருக்கும்.

யமஹா Y கனெக்ட் செயலி மூலமாக ப்ளூடூத் கனெக்டிவிட்டி, TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு-ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் எனப் பல்வேறு முக்கியமான, தினசரி பயன்பாட்டிற்கு தேவையான அம்சங்களை இந்த 125 சிசி ஸ்கூட்டரில் யமஹா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்கூட்டர் குறித்து கண்டிப்பாகக் கூற வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு அம்சம் இதன் எடை. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களில் மிகவும் எடை குறைவான ஒரு ஸ்கூட்டர் மாடலாக இந்த யமஹா ஃபேஸினோவைக் கூறலாம். வெறும் 99 கிலோ எடையை மட்டுமே கொண்டிருக்கிறது. இதனை வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் எளிதாகக் கையாளும் வகையிலான ஸ்கூட்டர் மாடலாக இந்த ஃபேஸினோ இருக்கும்.

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹீரோ டெஸ்டினி 125, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125, சுஸூகி அக்சஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களுக்குப் போட்டியாக இந்த யமஹா ஃபேஸினோ 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 125 சிசி பிரிவில் மேலே கூறிய முன்னணி ஸ்கூட்டர் மாடலுடன் போட்டியிடுவதற்கான அனைத்து திறனையும் கொண்ட ஒரு ஸ்கூட்டர் மாடலாக யமஹாவின் ஃபேஸினோ 125 உள்ளது. மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடலாகவும் இருப்பது இதன் பிளஸ் பாயிண்ட்.

குறிப்பாக அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர் மாடலாகவும் இது இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். லிட்டருக்கு சுமார் 69 கிமீ வரையிலான மைலேஜை இந்த ஸ்கூட்டர் கொடுப்பதாக யமஹா குறிப்பிட்டுள்ளது. தினசரிப் பயன்பாட்டில் லிட்டருக்கு 55 கிமீ முதல் 60 கிமீ வரையிலான மைலேஜை இந்த ஸ்கூட்டரில் தாராளமாக நாம் பெறலாம்.

Article Published On: Thursday, May 7, 2026, 8:41 [IST]
English summary
Yamaha fascino 125 price hiked in india check all details here
மேலும்... #yamaha #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+