புதிய 'FZ ப்ளூ ஃபிளெக்ஸ்' பைக்கை வெளியிட்டுள்ளது யமஹா.. E85 பெட்ரோலையும் இதில் பயன்படுத்தலாம்!

கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் தான் ஹீரோ நிறுவனம் இந்தியாவில் தாங்கள் அதிகம் விற்பனை செய்து வரும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் ஆகிய பைக்குகளின் ஃபிளெக்ஸ் ஃப்யூல் மாடல்களை வெளியிட்டது. தற்போது அதனைப் பின்பற்றி யமஹா நிறுவனமும் தங்களுடைய பிரபலமான FZ சீரிஸில் புதிய ஃபிளெக்ஸ் ஃப்யூல் பைக்கை வெளியிட்டுள்ளது.

அடிப்படையான FZ-FI பைக்கை விட 10,000 ரூபாய் அதிகமாக 1.24 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய FZ ப்ளூ ஃபிளெக்ஸ் (FZ Blue Flex) பைக். இந்த பைக்கின் டிசைன் FZ ரேவ் (FZ Rave) பைக்கின் டிசைனை ஒற்றிருக்கிறது. அதுவும் கிட்டத்தட்ட 1.24 லட்சம் ரூபாய் விலையையே கொண்டுள்ளது. சில நூறு ரூபாய் தான் வித்தியாசம்.

Yamaha FZ Blue Flex

ஸ்டாண்டர்டு FZ பைக்கிற்கும், புதிய FZ ப்ளூ ஃபிளெக்ஸ் பைக்கிற்கு இடையே என்ன வேறுபாடு? எரிபொருள் பயன்பாடு தான். ஸ்டாண்டர்டான மற்ற FZ பைக்குகளில் E20 வரையிலான எரிபொருள், அதாவது 20 சதவீதம் வரை எத்தனால் (E20) மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த எரிபொருளையே பயன்படுத்த முடியும். அல்லது எத்தனாலின் சதவீதமும் 20 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் E10 மற்றும் E5 உள்ளிட்ட எரிபொருள்களைக் கூடப் பயன்படுத்தலாம்.

ஆனால், புதிய FZ ப்ளூ ஃபிளெக்ஸ் பைக்கில் E85 வரையில், அதாவது 85 சதவீதம் வரை எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த எரிபொருளையும் பயன்படுத்த முடியும். இந்தப் புதிய பைக்கில் E20 எரிபொருளையும் பயன்படுத்த முடியும். பைக்கிற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் ஸ்டாண்டர்டான FZ பைக்குகளில் E20-க்கு மேலான, அதாவது 20 சதவீதத்திற்கு மேலான எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளைப் பயன்படுத்த முடியாது.

Yamaha FZ Blue Flex

அது ஸ்டாண்டர்டு FZ பைக்குகளை கடுமையாகப் பாதிக்கும். அதுவும் E85 எரிபொருளை கண்டிப்பாக பயன்படுத்தவே முடியாது. மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு நடவடிக்கையை துரிதமாக்கி வரும் நிலையில், எதிர்பார்ப்பிற்கு முன்பாக வெகு வேகமாகவே அதிகளவு எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளுக்கு ஏற்ப வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் ஒன்றாகவே இந்த யமஹா FZ ப்ளூ ஃபிளெக்ஸ் பைக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. E85 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் இதன் இன்ஜினும் எரிபொருள் பயணிக்கும் பாதையும் மேம்படுத்தப்பட்டிருப்பதைத் தவிர்த்து ஸ்டாண்டர்டு FZ பைக்கில் இருந்து இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்கில் வேறெந்த மாற்றமும் இல்லை.

இந்த பைக்கிலும் அதே 149 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இன்ஜினானது ஸ்டாண்டர்டு FZ பைக்கின் இன்ஜினை விட 0.6 hp (11.7 hp) வரை குறைவான பவர் மற்றும் 0.5 Nm (12.8 Nm) வரை குறைவான டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை விட இந்த எத்தனால் கலப்பு பைக்கின் வழக்கமான பெர்ஃபான்ஸும் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து வசதிகளிலோ, டிசைனிலோ இந்தப் புதிய பைக் எந்த வகையிலும் மாறுபடவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கனா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட டீலர்ஷிப்கள் மூலம் மட்டும் இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்கை முதற்கட்டமாக விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மற்றும் யமஹா மட்டுமின்றி மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் தாங்கள் அதிகம் விற்பனை செய்யும் தயாரிப்புகளின் ஃபிளெக்ஸ் ஃப்யூல் வெர்ஷன்களை, அதாவது E85 எரிபொருளில் இயங்கும் வெர்ஷன்களை அடுத்தடுத்து இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த வகையிலான அதிகளவிலான பைக்குகள் விற்பனையில் இருக்கும் என்றே தெரிகிறது.

Article Published On: Friday, July 10, 2026, 16:21 [IST]
English summary
Yamaha fz blue flex fuel bike launched in india with capabilities of running in e85 fuel
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out