ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிமீ மைலேஜ் தரும் யமஹா பைக்! அடிமாட்டு விலையில் வித்து தள்ளீட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று யமஹா எஃப்இஸட் (Yamaha FZ). இந்த பைக்கின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 16,852 யமஹா எஃப்இஸட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக வெறும் 9,589 யமஹா எஃப்இஸட் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 7,263 யமஹா எஃப்இஸட் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் யமஹா எஃப்இஸட் பைக் விற்பனையில் 75.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. யமஹா எஃப்இஸட் வரிசையில் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 8 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவை எஃப்இஸட் ரேவ் (FZ Rave), எஃப்இஸட்-எஃப்ஐ (FZ-FI), எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ (FZ-S FI), எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ ஹைப்ரிட் (FZ-S FI Hybrid), எஃப்இஸட்-எக்ஸ் (FZ-X), எஃப்இஸட்-எக்ஸ் ஹைப்ரிட் (FZ-X Hybrid), எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ வெர்ஷன் 4.0 (FZ-S FI Ver 4.0), எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ வெர்ஷன் 4.0 டிஎல்எக்ஸ் (FZ-S FI Ver 4.0 DLX) ஆகியவை ஆகும்.

யமஹா எஃப்இஸட் வரிசையை சேர்ந்த அனைத்து பைக்குகளிலும் 149 சிசி திறன் கொண்ட இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா எஃப்இஸட் வரிசையை சேர்ந்த பைக்குகளில், ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் காரணத்தால், அவை சிறப்பான மைலேஜிற்கு (Mileage) பெயர் பெற்றவையாக விளங்குகின்றன. குறிப்பாக எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ ஹைப்ரிட் பைக் ஒரு லிட்டருக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்குவதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் எஃப்இஸட் வரிசையை சேர்ந்த பைக்குகளுக்கு சரியான விலை நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. அதாவது இவை வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக உள்ளன. இதன் காரணமாகவே அவற்றின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் யமஹா எஃப்இஸட் ரேவ் பைக்கின் ஆரம்ப விலை 1.19 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எஃப்இஸட்-எஃப்ஐ பைக்கின் ஆரம்ப விலை 1.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த வரிசையில் எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ பைக்கின் ஆரம்ப விலை 1.25 லட்ச ரூபாயாக உள்ளது.
இந்த வரிசையில் எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ ஹைப்ரிட் பைக்கின் ஆரம்ப விலை 1.35 லட்ச ரூபாய் ஆகவும், எஃப்இஸட்-எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 1.21 லட்ச ரூபாய் ஆகவும், எஃப்இஸட்-எக்ஸ் ஹைப்ரிட் பைக்கின் ஆரம்ப விலை 1.39 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ வெர்ஷன் 4.0 மற்றும் எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ வெர்ஷன் 4.0 டிஎல்எக்ஸ் பைக்குகளின் ஆரம்ப விலை தலா 1.20 லட்ச ரூபாய் ஆக உள்ளது. இவை அனைத்துமே யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் செயல்திறனும் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு யமஹா எஃப்இஸட் வரிசை பைக்குகள் மிகவும் ஏற்றவை என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையில் உள்ள டிசைன், யமஹா எஃப்இஸட் வரிசை பைக்குகளின் கூடுதல் ப்ளஸ் பாயிணட் ஆகும்.


Click it and Unblock the Notifications








