ஷோரூமுக்கு வர்றவங்க இந்த கலர்ல தான் பைக் வேணும்னு கேட்டு வாங்க போறாங்க! பல நாளா எதிர்பார்க்கப்பட்ட கலர்!

இந்தியா யமஹா மோட்டார் (India Yamaha Motor) நிறுவனம் இந்திய மக்களின் (குறிப்பாக இந்திய இளைஞர்களின்) நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின் எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR155) பைக்கை கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கில் புதியதாக 'மெட்டாலிக் பிளாக்' (Metallic Black) கலர் ஆப்ஷனை இன்று யமஹா அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1,58,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்படி, தங்க நிறத்திலான முன்பக்க யுஎஸ்டி (USD) ஃபோர்க்குகள் கிடைக்கும் இந்த கலர் ஆப்ஷனில், பெயருக்கேற்ப முழுவதும் கருப்பு நிறத்தில் கவர்ச்சியான பிரீமியம் தோற்றத்தில் எக்ஸ்எஸ்ஆர்155 பைக் கிடைக்கும்.

yamaha xsr155 metallic black

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு.ஹஜிமே அயோட்டா இதுகுறித்து பேசுகையில், "எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கிற்கான இந்தியாவின் அமோக வரவேற்பு, நவீன ரெட்ரோ ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களின் தாக்கத்தை காட்டுகிறது. வாடிக்கயாளர்களின் கருப்பு நிறத்திற்கான விருப்பத்தை விரைவாகச் செயல்படுத்தினோம். இது பைக்கில் தனித்துவம், செயல்திறன், ஸ்டைலை விரும்புபவர்களுடனான எங்கள் தொடர்பை ஆழமாக்குகிறது" என்றார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கிற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது பைக் ஆர்வலர்கள் பலரது விருப்பமான தேர்வாக மாறியுள்ளது. சுறுசுறுப்பான அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்எஸ்ஆர்155, சமப்படுத்தப்பட்ட, எடை குறைவான சேசிஸ் மற்றும் 17 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது.

yamaha xsr155 metallic black

யமஹா எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கில் கலர் ஆப்ஷனை பொறுத்து விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய மெட்டாலிக் கருப்பு நிறத்தில் இந்த பைக்கிற்கு ரூ.1,58,990 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வழங்கப்படும் கிரேஷ் க்ரீன் மெட்டாலிக் நிறத்திலும் இந்த பைக்கின் விலை இதுவே ஆகும். இவை இல்லாமல், மெட்டாலிக் நீலம் (ரூ.1,49,990), விவிட் சிவப்பு (ரூ.1,52,990), மெட்டாலிக் கிரே (ரூ.1,56,990) உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்த யமஹா பைக் கிடைக்கிறது.

இந்த பைக்கில் பொருத்தப்படும் VVA தொழிற்நுட்பம் கொண்ட 155சிசி லிக்யுடு-கூல்டு, 4-வால்வு என்ஜின், 13.5 கிலோவாட் ஆற்றல் மற்றும் 14.2 என்.எம் டார்க் திறனை வழங்கி வலுவான ஆக்ஸலரேஷனை உறுதி செய்கிறது. மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள், பயணம் செய்பவர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன.

யமஹாவின் டெல்டாபாக்ஸ் ஃபிரேமில் கட்டப்பட்டுள்ள இந்த பைக் அலுமினியத்திலான ஸ்விங் ஆர்ம், USD முன்பக்க ஃபோர்க்குகள், மோனோக்ராஸ் பின்பக்க சஸ்பென்ஷன், அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் போன்ற அம்சங்களுடன் துல்லியமான ஹேண்ட்லிங்கையும், சிறந்த பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய நிறம், பைக்கின் அட்வான்ஸான எதிர்கால வடிவமைப்பு, மஸ்குலர் டிசைன் டேங்க் மற்றும் ரெட்ரோ பாணி அம்சங்களை மேலும் எடுப்பாக்குகிறது. இந்த புதிய மெட்டாலிக் பிளாக் கலர் ஆப்ஷனின் அறிமுகம், யமஹாவின் 'பயணம் செய்பவர்களுக்கு முன்னுரிமை' தத்துவத்தை உறுதி செய்கிறது.

மேலும், இந்த அறிமுகம் எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கை மேலும் பல வாடிக்கையாளர்களிடம் கொண்டுப்போய் சேர்க்கும் என எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு செவி சாய்ப்பதன் மூலம், யமஹா இந்தியாவில் தனது பிரீமியம் மற்றும் செயல்திறன் சார்ந்த நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. இவ்வாறு யமஹா, தனது பைக்குகளின் உரிமைப் பெருமையையும், அவற்றில் பயணம் செய்வதன் உற்சாகத்தையும் தூண்டும் தயாரிப்புகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2026, 17:17 [IST]
English summary
Yamaha introduces new metallic black colour option for xsr155 motorcycle
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+