மிகவும் குறைவான விலையில் இந்த பைக்கை வாங்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் R15 ஸ்போர்ட் பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது யமஹா. இந்த விலை உயர்விற்குப் பின்பு கணிசமாகக் குறைவான விலையிலேயே தொடக்கநிலை R15 பைக் மாடலை நாம் வாங்க முடியும். அது எப்படி என்பதையும் தற்போது எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.
இளைஞர்கள் அதிகம் விரும்பும் இந்த ஸ்போர்ட்டியான பைக் மாடலை மூன்று வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. ஒன்று R15S மற்ற இரண்டு R15 V4 மற்றும் R15M. இந்த வேரியன்ட்களின் விலையை 4,900 ரூபாய் வரை யமஹா உயர்த்தியிருக்கிறது.

மேலே நாம் பார்த்த மூன்று வேரியன்ட்களில் மிகவும் குறைவான விலையைக் கொண்டிருப்பது R15S தான். இதனை விலை உயர்விற்குப் பின்னரும் ரூ.1.57 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்க முடியும். சிறப்பான பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்போர்ட் பைக்கை இவ்வளவு குறைவான விலையில் வாங்க முடிவது சிறப்பான விஷயம் தான்.
இதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. இந்த R15S என்பது முந்தைய தலைமுறை மாடல் ஆகும். தற்போது R15 வெர்ஷன் R15 V4 மாடல் விற்பனையில் இருக்கிறது. ஆனால் இந்த R15S என்பது சில டிசைன் மேம்பாடுகள் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை R15 மாடல் ஆகும். இதனை இந்த இரண்டு பைக்குகளுக்கான டிசைனை ஒப்பிட்டுப் பார்க்கும் போதே நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிசைன் மற்றும் வசதிகளில் மட்டுமே இந்த R15S மூன்றாம் தலைமுறை மாடலாக இருக்கிறது. மற்றபடி இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் ஒன்று தான். இப்போதும் இந்த மூன்றாம் தலைமுறை பைக்கை வாங்கக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எனவே R15 பைக்கை குறைவான விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த R15S பைக்கை வாங்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக R15 V4 பைக் இருக்கிறது. நான்காம் தலைமுறை மாடலின் அடிப்படை R15 இந்த V4 தான். இதனை ரூ.1.76 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் இனி வாங்கலாம். மேலே கூறிய R15S மாடலை விட ரூ.20,000 கூடுதலாக இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். அதற்கு ஏற்ற வகையில் அப்ஷிப்டிற்கு மட்டும் க்விக்ஷிப்டர், USD ஃபோர்க் உள்ளிட்ட முக்கியமான அப்கிரேடுகளை இந்த பைக் கொண்டுள்ளது.
இறுதியாக R15 லைன்-அப்பில் டாப் எண்டான R15M பைக் மாடல் உள்ளது. இதனை ரூ.1.91 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இனி நாம் வாங்க முடியும். இதிலேயே மோட்டோஜிபி ஸ்பெஷல் எடிஷன் பைக்கை ரூ.1.96 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். இந்த டாப் எண்டு வேரியன்டில் TFT டிஸ்பிளே மற்றும் க்விக்ஷிப்டர் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.
அனைத்து வேரியன்ட்களிலும் மேலே கூறியது போல இன்ஜின் ஒன்று தான். R15 லைன்-அப்பிற்கு 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினை யமஹா கொடுத்திருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 18.4 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட்டில் இருக்கும் வாடிக்கையாளர்கள் நாம் மேலே கூறியது போல R15S பைக்கை வாங்கலாம். க்விக்ஷிப்டர், TFT டிஸ்பிளே, USD ஃபோர்க் உள்ளிட்ட சில அம்சங்களை இழக்க நேரிடும். ஆனாலும், முழுமையான R15 அனுபவத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. இந்த வசதிகளும் கூடுதலாக வேண்டும் என்பவர்கள் உயர்நிலை வேரியன்ட்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதற்கு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications