இதைப் போல ஒரு பைக்கை இனி எந்த நிறுவனமும் தயாரிக்க முடியாது.. கம்மி விலை, நல்ல மைலேஜ், தரமான பெர்ஃபாமன்ஸ்!

இந்தியாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பைக் மாடல் என்றால் அது யமஹாவின் R15 தான். இந்த பைக்கை வாங்காமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன, ஆனால் பிடிக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராக்டிகாலிட்டி காரணங்களினால் பிடித்திருந்தும் இந்த பைக்கை வாங்காமல் இருக்கும் வாடிக்கையாளர்களே அதிகம்.

யமஹா செய்த சிறப்பான சம்பவங்களில் ஒன்று R15. மிக மிக ஸ்போர்ட்டியான மற்றும் அக்ரஸிவ்வான டிசைன், தரமான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் 155 இன்ஜின், இன்ஜினின் பெர்ஃபாமன்ஸை மேலும் தூக்கிக் கொடுக்கும் ஏரோடைனமிக் டிசைன், இதற்கு எல்லாம் மேலாக லிட்டருக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரையிலான மைலேஜ் என வேறு எந்த நிறுவனமும் கொடுக்க முடியாத பேக்கைஜைக் கொண்டிருக்கும் ஒரு பைக் மாடலாக யமஹா R15 இருக்கிறது.

Yamaha R15 V4

ஒரே பைக் தான் என்றாலும் மூன்று மாடல்களாக இதனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. R15S, R15 V4 மற்றும் R15M என மூன்று மாடல்களாக இந்த R15 தொடக்கநிலை ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மூன்று மாடல்களுக்கு இடையிலும் என்ன வேறுபாடு, இவை என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன ஆகிய தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

யமஹா R15S

முதலில் அடிப்படையான S மாடலைப் பார்க்கலாம். அடிப்படையான வேரியன்ட் இது தான். இதிலிருந்து கூடுதல் அம்சங்களை மற்ற இரண்டு மாடல்களும் கொண்டிருக்கும். இந்த பைக்கில் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது யமஹா. இந்த இன்ஜினானது 18.4 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Yamaha R15 S

முந்தைய தலைமுறை R15 V3 மாடலையே R15S ஆக விற்பனை செய்து வருகிறது யமஹா. எனவே V4 மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, சற்று பழைய டிசைனை இந்த S மாடல் கொண்டிருக்கும். இதனை ரூ.1.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா.

யமஹா R15 V4

மேம்பட்ட புதிய தலைமுறை மாடலாக இந்த V4 இருக்கிறது. முற்றிலும் மேம்பட்ட மாடர்ன் டிசைன் லாங்குவேஜை இந்த பைக் கொண்டிருக்கும். இந்த பைக்கில் USD ஃபோர்க் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் அப்ஷிப்டிற்கு க்விக் ஷிப்ட் ஆகிய மேம்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆறு நிறங்களில் ரூ.1.66 லட்சம் முதல் ரூ.1.71 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த R15 V4 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெக்கானிக்கலாக பைக்கின் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

யமஹா R15M

R15 லைன்-அப்பிலேயே டாப் எண்டு இந்த M மாடல் தான். TFT டிஸ்பிளே, க்விக் ஷிப்டர், மோட்டோ ஜிபி ரேஸ்பைக் போன்ற லைவரி, உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மெக்கானிக்கலாக மேலே குறிப்பிட்டுள்ள அதே 155 சிசி இன்ஜின் தான் இந்த M மாடலிலும் இருக்கிறது. இதனை ரூ.1.81 லட்சம் முதல் ரூ.1.91 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது யமஹா.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல பிராக்டிகாலிட்டியைத் தவிர்த்து மற்ற அனைத்து வகைகளிலும் மிகச்சிறப்பான ஒரு பைக் இந்த யமஹா R15. ரேஸிங் பைக்கின் அனுபவத்தை மிகவும் குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த பெருமையை இந்த R15 பைக்கையே சேரும். அதற்காகவே யமஹாவிற்கு நிறைய நன்றிகளைச் சொல்லலாம். இப்போது மட்டுமல்ல எப்போதுமே இளைஞர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஒரு பைக் மாடலாக யமஹா R15 இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 19:02 [IST]
English summary
Yamaha r15 entry level sport bike variants price and features
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+