ஆர்15 பைக் மார்க்கெட்டை யமஹா காலி பண்ணினு போக வேண்டியதுதான்! 200சிசி-க்கும் கம்மியா 160சிசி-இல் கேடிஎம் பைக்!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் இந்த 2026ஆம் ஆண்டில் கேடிஎம் ஆர்சி160 (KTM RC 160) பைக் வெளியாக உள்ளது. விலை குறைவான எண்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் (Entry-level Sports Bike) பிரிவில், யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்200 (Bajaj Pulsar RS 200) போன்ற ஏற்கனவே விற்பனையில் உள்ள பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கேடிஎம் 160 டியூக் (160 Duke) பைக்கின் அடிப்படை மெக்கானிக்கல் பாகங்களை புதிய ஆர்சி160 பகிர்ந்துக் கொள்ளும். அதேவேளையில் இதன் வடிவமைப்பு ஆர்சி200 பைக்கை ஒத்திருக்கும். சமீபத்தில் கசிந்த ஆர்சி160 பைக்கின் படங்களும் இதை உறுதிசெய்துள்ளன. இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் புதிய எண்ட்ரி-லெவல் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாக, இது நவீன மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெறும்.

ktm rc160 coming to india

இதன் அம்சங்களில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஷார்ப்பான வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள், எதிர்காற்றில் இயங்குவதற்கு ஏற்ற ஏரோடைனமிக் ஃபேரிங் & விண்ட்ஷீல்ட், செதுக்கப்பட்ட டிசைனில் பெட்ரோல் டேங்க், இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் பைக்கிற்கு அடியில் எக்ஸாஸ்ட் குழாய் ஆகியவை அடங்கும். பந்தய பைக்குகளுக்கு இணையான லிவரி மற்றும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் ஆகியவை ஆர்சி160 பைக்கின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

ஆர்சி160 பைக்கிற்கு ஆற்றலை அளிக்க 160 ட்யூக் பைக்கின் அதே 164.2 சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்யுடு-கூல்டு SOHC என்ஜின் தான் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் 9,500 ஆர்பிஎம்-இல் 19 பிஎஸ் ஆற்றலையும், 7,500 ஆர்பிஎம்-இல் 15.5 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது அன்றாட நகர்ப்புற பயன்பாடு மற்றும் பந்தயங்களுக்கு ஏற்ற 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

ktm rc160 coming to india

கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் (1290 Super Duke R) பைக் என்ஜினை போன்று இந்த என்ஜினும் நான்கு வால்வுகள் மற்றும் கார்பன்-கோட்டட் கேம் ஃபலோயர்கள் மூலம் மேம்பட்ட செயல்திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. ஆர்சி160 பைக்கிற்கு போட்டியாக உள்ள யமஹா ஆர்15 வி4 பைக்கின் 155சிசி என்ஜின் 18.4 பிஎஸ் ஆற்றலையும், 14.2 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

புதிய ஆர்சி160 பைக்கின் என்ஜின் செயல்திறன் எண்கள் சற்று மேம்பட்டதாகவும், டாப்-எண்ட் செயல்திறனை அதிகரிக்க, இறுதி டிரைவ் விகிதத்தில் சிறிய மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த பைக் 160 டியூக்கின் அதே இரண்டாக பிரிக்கப்பட்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்படும். ஏனெனில், இந்த ஃப்ரேம் ஆனது ஷார்ப்பான ஹேண்ட்லிங்கையும், எளிமையான பயண அனுபவத்தையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில், முன்பக்கத்தில் மிகவும் எடை குறைவான USD ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அபெக்ஸ் மோனோஷாக் (Apex Monoshock) யூனிட்டும் இடம்பெறும். இதற்கு ஏற்ப வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இலகுரக 17 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் ஸ்போர்ட்டியான டயர்கள் சிறந்த பிடிமானத்தையும், கட்டுப்பாட்டையும் உறுதி செய்யும்.

ktm rc160 coming to india

பிரேக்கிங் அமைப்பிற்காக, பைக்கின் முன் சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின் சக்கரத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக டூயல்-சேனல் ABS ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படும். சூப்பர்மோட்டோ ABS அம்சமும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் அம்சங்களில், ஹேண்டில்பாருக்கு மத்தியில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் 125சிசி பைக்குகள் பிரிவில் இருந்து 160சிசி பைக்குகள் பிரிவுக்கு தனது சந்தை உத்தியை விரிவுபடுத்தும் முனைப்பில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே, 160 ட்யூக் பைக்கை இந்தியாவில் இந்த அறிமுகம் செய்த நிலையில், அடுத்ததாக ஆர்சி160 பைக்கை களமிறக்க தயாராகி வருகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி160 பைக்கின் வருகை, எண்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குள் பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும். அதன் சக்திவாய்ந்த என்ஜின், பிரீமியம் அம்சங்கள் மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்டைல் மூலம் இது யமஹா ஆர்15 வி4 போன்ற பைக்குகளுக்குக் கடுமையான சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 1, 2026, 11:58 [IST]
English summary
Yamaha r15 rival ktm rc160 motorcycle for india coming in this 2026
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X