இளசுகளின் கவனத்திற்கு... ரூ.2 லட்சத்தில் வரும் புத்தம் புதிய யமஹா ஆர்2 பைக்... புக்கிங் துவங்கியது!!

இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய யமஹா ஆர்2 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 செலுத்தி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வரும் 27ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தற்போது இளைஞர்களின் முக்கியத் தேர்வாக உள்ள யமஹா ஆர்15 மற்றும் ஆர்3 ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடையிலான பட்ஜெட்டில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

Yamaha R15

(Representative Image)

யமஹா ஆர்15 போன்றே இந்த புதிய மாடலும் ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் டிசைனை பெற்றிருக்கும். ஆர்15 பைக் போன்றே இந்த மாடலும் தனித்துவமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்ததில் பார்த்தவுடனே கவரும் டிசைன் அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கும்.

புதிய யமஹா ஆர்2 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 200 முதல் 220சிசி இடையிலான திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்படலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், கேடிஎம் ஆர்200, ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் ஆகிய மாடல்களுக்கு போட்டி போடும் வகையில் 25எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம்.

மேலும், போட்டியாளர்களை விட இந்த புதிய பைக் எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஓட்டும்போது சிறந்த கையாளுமையைும், பாதுகாப்பான பயணத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது யமஹா ஆர்15 பைக் வேரியண்ட்டை பொறுத்து ரூ.1.57 லட்சம் முதல் ரூ.1.98 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், யமஹா ஆர்2 பைக் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.2 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம். இந்த பைக் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பைக் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடாமல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால், அறிமுகம் செய்த பின்னர் புக்கிங்கை ரத்து செய்ய விரும்புவோருக்கு வரும் செப்டம்பர் 5ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் புக்கிங்கை ரத்து செய்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Via- Rushlane

Article Published On: Wednesday, August 12, 2026, 17:00 [IST]
English summary
Yamaha r2 booking india price launch date confirmed
மேலும்... #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out