டிவிஎஸ் அப்பாச்சிக்கு எமனா வரப்போகும் யமஹா பைக்.. இப்போ எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா இருக்கே!

இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பைக் மாடலாக யமஹாவின் R15 இருந்து வருகிறது. இந்த பைக்கை ஒரு முறையாவது வாங்க வேண்டும் என்று நினைக்காத இளைஞர்களே இந்தியாவில் இல்லை என்று கூற முடியும். காரணம் மிகவும் குறைவான விலையில் ரேஸ் பைக்கின் அனுபவம் மற்றும் பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய ஒரே பைக் யமஹா R15 தான்.

150 சிசி பைக் தானே என டிசைன் மற்றும் வசதிகளில் மெத்தனம் காட்டாமல், 1000 சிசி ரேஸ் பைக்கை எப்படி தயாரிக்குமோ அதே அளவிலான அர்ப்பணிப்பை R15 பைக்கிலும் யமஹா கொடுத்திருக்கும். 150 சிசி பிரிவிலேயே மிகவும் பவர்ஃபுல்லான பைக்காக, அதிக பெர்ஃபாமன்ஸைக் கொண்ட பைக்காக இதனை நாம் கூற முடியும். இதனாலேயே 200 சிசி பைக்குகளுடன் தான் இதன் பெர்ஃபாமன்ஸை நாம் ஒப்பிட்டு சோதனை செய்ய முடியும்.

Yamaha R15

அப்படி இருக்கும் போது 200 சிச இன்ஜின் கொண்ட R சீரிஸ் பைக்கை யமஹா வெளியிட்டால் எப்படி இருக்கும். R15-ல் 15 என்பது 150 சிசியைக் குறிக்கிறது. அந்த வகையில் 200 சிசி இன்ஜின் கொண்ட பைக்கிற்கு R2 என்றே யமஹா பெயர் சூட்ட வேண்டியிருக்கும்.

அப்படி R2 என்ற பைக் பெயரை டிரேடுமார்க்கிற்காகப் பதிவு செய்துள்ளது யமஹா. இந்த முறை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவிலும் R2 என்ற பெயரை யமஹா டிரேடுமார்க் செய்தது தொடர்பான தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Yamaha R15

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்தப் பெயரை டிரேடுமார்க் செய்திருப்பதையடுத்து R2 பைக்கை வெளியிடுவதில் யமஹா உறுதியாக இருப்பது தெரிகிறது. ஏற்கனவே 2021ம் ஆண்டு இந்தப் பெயரை அமெரிக்காவில் ஒரு முறை டிரேடுமார்க் செய்திருக்கிறது யமஹா. தற்போது மீண்டும் ஒரு முறை செய்திருப்பதையடுத்து, விரைவாகவே இந்த பைக்கின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம் என யமஹா ரசிகர்கள் குஷியாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

புதிய R2 பைக்கில் முற்றிலும் புதிய இன்ஜினை நாம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் R15 இன்ஜினையே சற்று மறுவடிவமைப்பு செய்து R2 பைக்கில் யமஹா பயன்படுத்தும் எனத் தெரிகிறது. இந்த பைக் வெளியாகும் பட்சத்தில் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட யமஹாவின் மூன்றாது R சீரிஸ் பைக்காக இந்த R2 இருக்கும். ஏற்கனவே R125 மற்றும் R15 ஆகிய பைக்குகள் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகின்றன. R25 பைக்கில் இருந்து ட்வின் சிலிண்டர் இன்ஜின் தொடங்கிவிடுகிறது.

R15 பைக்கின் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினானது 18.1 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்படும் 200 சிசி இன்ஜினானது 25 hp பவர் மற்றும் 19 Nm வரையிலான டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கொண்டிருக்கும் பட்சத்தில் கேடிஎம்மின் 200 சிசிக்கு இணையாக இந்தியாவில் அதிக பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இன்ஜினாக இது இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதிருக்கும் இன்ஜினுடன் பவர்ஃபுல்லான பைக்காவே இருக்கிறது R15. ஆனால் அதற்கேற்ற வகையில் மற்ற பைக்குகளை விட அதிக விலையைக் கொண்டதாகவும் இருக்கிறது. R2 பைக் அதன் மேம்படுத்தப்படும் இன்ஜினுக்கு ஏற்ப விலையும் R15 பைக்கை விட கணிசமான அளவில் அதிகமாகவே இருக்கும். 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் எக்ஸ்-ஷோரூம் விலை இருக்கும் பட்சத்தில் ட்ரையம்ப் மற்றும் ராயல் என்ஃபீல்டின் 350 சிசி பைக்குகளுடன் R2 போட்டியிடத் தொடங்கிவிடும்.

அப்படி போட்டியிடும் போது ஒரு இடத்தில் R15 (அல்லது R2) தனித்துத் தெரியுமென்றால் அது மைலேஜ் தான். பெர்ஃபாமன்ஸுடன் நல்ல மைலேஜும் கொடுப்பது தான் R15 பைக்கின் சிறப்பாக இருக்கிறது. R2 பைக்கிலும் அதே பிளஸ்ஸை யமஹா கொடுக்கும் பட்சத்தில் ஒப்பீடு நிலையாக இருக்கும். யமஹா என்ன செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

Article Published On: Tuesday, May 26, 2026, 16:19 [IST]
English summary
Yamaha r2 trademark filed again in us when will the bike launch in india
மேலும்... #yamaha #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out