R25 மற்றும் R3 பைக் மாடல்களை அப்டேட் செய்யும் யமஹா.. பவர்ஃபுல்லான ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகள்!

யமஹாவின் R சீரிஸ் பைக்குகள் உலகம் முழுவதுமே மிகவும் பிரபலம். 125 சிசியில் தொடங்கி 1000 சிசி வரையிலான இன்ஜினுடன் கூடிய R சீரிஸ் பைக் மாடல்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது யமஹா. அதில் R15 பைக் மட்டுமே இந்தியாவில் விற்பனையில் இருக்கிறது. R3 பைக் மாடலையும் சில ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வைத்திருந்தது அந்நிறுவனம்.

இந்தியாவில் R3 பைக்கின் மேம்பட்ட வடிவத்தை யமஹா வெளிடுமா இல்லையா என்பது சந்தேகம் தான். ஆனால், ஜப்பானில் R3 மற்றும் R25 ஆகிய இரண்டு பைக்குகளையும் விரைவில் மேம்படுத்தவுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல்களினை தற்போது அறிமுகமும் செய்துள்ளது யமஹா. இந்தப் புதிய பைக் மாடல்களில் என்ன மாறவுள்ளது, இவை என்ன அம்சங்களைக் கொண்டிருக்கின்றன, ஆகிய விவரங்களைப் பார்க்கலாம்.

Yamaha R3

அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள அப்டேட் செய்யப்பட்ட மாடல்களுக்கு புதிய நிறங்களை யமஹா கொடுத்திருக்கிறது. யமஹாவின் ஐகானிக்கான ப்ளூ, முழுமையான கருப்பு நிறம் கொண்ட கிளாஸிக் பிளாக், லைட் கிரீன் மற்றும் பிளாக் என டூயல் டோன் கொண்ட நிறம் மற்றும் ஒயிட் மற்றும் ரெட் கொண்ட டூயல் டோன் என நான்கு விதமான நிறத் தேர்வுகளில் புதிய பைக் மாடல் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இதில் லைட் கிரீன் நிறமானது தனித்துத் தனித்துவமாகத் தெரிகிறது.

R3 மற்றும் R25 ஆகிய இரண்டு அடிப்படையில் ஒரே பைக் தான். ஃபிரேம், பிளாட்ஃபார்ம், சஸ்பென்ஷன் மற்றும் வசதிகள் என எல்லாமே இரண்டு பைக்குகளிலும் ஒன்று தான். இன்ஜின் மட்டும் தான் வேறு வேறு. R25 பைக்கில் 249 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜினானது 34.5 hp பவர் மற்றும் 23 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Yamaha R3

இதுவே R3 பைக்கில் சற்று பெரிய 320 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 300 சிசி இன்ஜினானது 41.4 hp பவர் மற்றும் 30 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களுமே கூட கிட்டத்த ஒன்று தான். இரண்டு இன்ஜின்களுக்கு இடையிலும் ஒரேயொரு வித்தியாசம் தான்.

R25 இன்ஜினில் உள்ள சிலிண்டர்களின் போரின் (Bore) அளவு (சிலிண்டரின் விட்டம்) 60 மிமீ ஆகவும், ஸ்ட்ரோக்கின் அளவு (சிலிண்டரின் நீளம்) 44.1 மிமீ ஆகவும் இருக்கிறது. இதுவே R3 பைக்கில் போரின் அளவு மட்டும் 68 மிமீ ஆக இருக்கிறது. ஸ்ட்ரோக்கின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஒரு வேறுபாடு தான் இரண்டு பைக்கின் பவர் மற்றும் டார்க்கின் உற்பத்தித் திறனை மாற்றுகிறது.

இரண்டு பைக்குகளிலும், இரண்டு பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய அம்சங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவை சற்று குறைவாக 780 மிமீ சீட் உயரத்தையும் கொண்டிருக்கின்றன. R25 பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.4.04 லட்சம் என்ற விலையையும், R3 பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.4.25 லட்சம் என்ற விலையையும் நிர்ணயம் செய்துள்ளது யமஹா.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த மேம்படுத்தப்பட்ட பைக் மாடல்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். சில ஆண்டுகள் மட்டும் R3 பைக்கை முழுவதுமாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தது யமஹா. முதலில் அதிக விலையில் வெளியானாலும், பின்னர் பெருமளவில் குறைக்கப்பட்டது இறுதியாக ரூ.3.39 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது R3. எனினும் பெரியளவில் இந்த பைக் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை.

எனவே இப்போதைக்கு பெரிய இன்ஜின் கொண்ட அல்லது பல சிலிண்டர்கள் கொண்ட பைக் மாடல்களை இந்தியாவிற்கு யமஹா கொண்டு வராது என்றே தெரிகிறது. இந்தியாவில் சொகுசு மற்றும் ஆடம்பர பைக்குகளுக்கான வாடிக்கையாளர் வட்டம் மிகவும் குறைவே. தற்சமயம் இந்தியாவில் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளில் மட்டுமே யமஹா ஆர்வம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 11, 2026, 9:52 [IST]
English summary
Yamaha r25 and r3 twin cylinder engine bike models to be updated soon
மேலும்... #yamaha #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+