ஹோண்டா ஆக்டிவாவை விட 15 ஆயிரம் குறைவான விலையில் யமஹா ஸ்கூட்டர்! ஒரு லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் உறுதி!
ஜப்பானை சேர்ந்த யமஹா (Yamaha) நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது. இதற்கு யமஹா ரே இஸட்ஆர் 125 (Yamaha Ray ZR 125) ஒரு நல்ல உதாரணம். இது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.
ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125) ஆகிய ஸ்கூட்டர்களுடன், யமஹா ரே இஸட்ஆர் 125 போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 92,848 ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 86,890 ரூபாயாக இருக்கிறது. ஆனால் யமஹா ரே இஸட்ஆர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 78,250 ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (ChennaiEx-showroom Price) ஆகும்.
யமஹா ரே இஸட்ஆர் 125 ஸ்கூட்டர் மிகவும் விலை குறைவானது என்றாலும் கூட, நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. இதில், 125 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் எஸ்ஓஹெச்சி 2 வால்வு ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 8.2 பிஎஸ் பவர் மற்றும் 10.3 என்எம் டார்க் ஆக இருக்கிறது.

இது ஹைப்ரிட் இன்ஜின் என்பதால், நல்ல மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. யமஹா ரே இஸட்ஆர் 125 ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து மைலேஜ் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
குறைவான விலை, சிறப்பான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், செல்போன் கனெக்டிவிட்டி மற்றும் இருக்கைக்கு அடியில் 21 லிட்டர் இடவசதி போன்ற வசதிகளையும் (Features), யமஹா ரே இஸட்ஆர் 125 கொண்டுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.
இதனால் ஒவ்வொரு மாதமும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல. நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,298 யமஹா ரே இஸட்ஆர் 125 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 21.96 சதவீத வளர்ச்சி ஆகும். காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஸ்கூட்டர்களுக்கான தேவை உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் மாதங்களில் யமஹா ரே இஸட்ஆர் 125 ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications