70 கிமீ மைலேஜ்! ஆக்டிவா, ஜூபிடரை விட மிகவும் குறைவான விலையில் யமஹா ஸ்கூட்டர்! மார்க்கெட்டை மிரள விட்றுச்சு!
இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஒரு சில தயாரிப்புகளுக்குதான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால் இவற்றை தாண்டி, இன்னும் ஏராளமான ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
இதில், யமஹா ரே இஸட்ஆர் (Yamaha Ray ZR) மிகவும் முக்கியமான ஒன்றாகும். யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 14,510 யமஹா ரே இஸட்ஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 25,798 யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11,288 யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
இதன் மூலம் யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டர் விற்பனையில் 77.79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் (Top 10 Scooters), யமஹா ரே இஸட்ஆர் 9வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், சுஸுகி ஆக்ஸஸ், டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq), ஹோண்டா டியோ (Honda Dio) மற்றும் சுஸுகி பர்க்மேன் (Suzuki Burgman) ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் யமஹா ரே இஸட்ஆர் 9வது இடத்தை பிடித்துள்ளது.
அதே சமயம் ஹீரோ டெஸ்ட்டினி (Hero Destini) ஸ்கூட்டர் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்திருப்பதற்கு பின்னால் 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று விலை (Price). மற்றொன்று மைலேஜ் (Mileage) ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 வெர்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை யமஹா ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ (Yamaha Ray ZR 125 Fi) மற்றும் யமஹா ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ ஸ்ட்ரீட் ரேலி (Yamaha Ray ZR 125 Fi Street Rally) ஆகியவை ஆகும்.
இதில், யமஹா ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 76,160 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது நேரடி போட்டி மாடல்களான ஹோண்டா ஆக்டிவா 125 (92,848 ரூபாய்), டிவிஎஸ் ஜூபிடர் 125 (86,290 ரூபாய்) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் 125 (82,906 ரூபாய்) ஆகியவற்றை விட விலை குறைவானது ஆகும்.
அதே நேரத்தில் யமஹா ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டரின் ஆரம்ப விலையும் கூட வெறும் 87,660 ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப நிலை வேரியண்ட்களின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
யமஹா ரே இஸட்ஆர் ஸ்கூட்டரானது, ஹைப்ரிட் (Hybrid) ரகத்தை சேர்ந்தது. இதன் 2 வெர்ஷன்களிலும் 125 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் ஹைப்ரிட் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்பதால், நல்ல மைலேஜ் வழங்குகிறது. இதை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் பலரும் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஓட்டும் விதம், ஸ்கூட்டரின் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒரு 125 சிசி ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு யமஹா ரே இஸட்ஆர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. யமஹா தயாரிப்பு என்பதால், செயல்திறன் மற்றும் நீண்ட வருடங்களுக்கு உழைக்கும் தன்மை ஆகிய அம்சங்களில் அசத்தும் என்பது ரே இஸட்ஆர் ஸ்கூட்டரின் ப்ளஸ் பாயிண்ட்.


Click it and Unblock the Notifications