ஆக்டிவாவுக்குப் போட்டியாக புதிய ஸ்கூட்டரைக் களமிறக்கும் யமஹா.. இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கப் போகுது!

யமஹா நிறுவனம் இந்தியாவில் புதிய என்மேக்ஸ் 155 (Nmax 155) மேக்ஸி ஸ்கூட்டரை வெளியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வெளியிடுவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பிரசீலனை செய்து வந்தது யமஹா. இந்தியா வாடிக்கையாளர்களின் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்காக 2024ம் ஆண்டு டெல்லி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் இதனை காட்சிப்படுத்தியிருந்தது. அவற்றைத் தொடர்ந்து தற்போது உறுதியாக ஒரு முடிவை அந்நிறுவனம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

யமஹாவின் இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான ஒரு காரணம், அதிகரித்து வரும் போட்டியாகத் தான் இருக்கும். 2021ம் ஆண்டு ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை வெளியிட்ட போது அதற்குப் போட்டியாக வேறெந்த ஸ்கூட்டருக்கும் அப்போது விற்பனையில் இல்லை. ஸ்கூட்டர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தோற்றத்தை உடைத்து மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் அக்ரஸிவ்வான லுக்கைக் கொண்டிருந்தது ஏராக்ஸ் 155.

Yamaha Nmax 155

குறிப்பாக ஏராக்ஸ் மாடலானது பிராக்டிகாலிட்டியை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராக்ஸுக்கென்று தனி வாடிக்கையாளர் வட்டம் உருவானது. கியர் இல்லாத சிறப்பான பெர்ஃபாமன்ஸ் கொண்ட இருசக்கர வாகனம் வேண்டும் என்று சொல்பவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்து அமைந்திருந்தது ஏராக்ஸ் 155. யோசித்துப் பாருங்கள், R15 பைக்கின் இன்ஜினுடன் ஒரு ஸ்கூட்டர், இது தான் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் விற்பனைப் புள்ளி என்று கூட நாம் சொல்லலாம்.

ஐந்தாண்டு களித்து ஏராக்ஸுக்கு இப்போது போட்டி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, ஏராக்ஸ் 155-யை போலவே பிராக்டிகாலிட்டி தூக்கி கடாசி விட்டது, பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸும் 160 என்ற ஸ்கூட்டரை ஹீரோ உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளில் தாங்கள் விற்பனை செய்து வரும் பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டரான ADV160-யை அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹோண்டா.

Yamaha Nmax 155

டிவிஎஸ் நிறுவனமும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் என்டார்க் 150-யை கணக்கில் கொள்ளாமல், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மேக்ஸி ஸ்கூட்டர்களைப் போலவே புதிய 160 ஸ்கூட்டர் ஒன்றை லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் உருவாக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் சொல்வது ஒன்றைத் தான், 160 சிசியில் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு விரிவடைகிறது. எனவே ஏராக்ஸ் 155 என்ற ஒரு ஸ்கூட்டரை மட்டும் வைத்திருக்காமல் ஏன் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரையும் களத்தில் இறக்கக்கூடாது எனத் தீரமானித்திருக்கிறது யமஹா.

என்மேக்ஸை 155 ஸ்கூட்டரை இந்தியாவில் யமஹா வெளியிடாமல் போவதற்கும் எந்தக் குறிப்பிட்ட காரணமும் இருக்க முடியாது. ஏனெனில் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே பிளாட்ஃபார்மே என்மேக்ஸ் 155 ஸ்கூட்டருக்கும் பயன்படுத்தப்பட்டி வருகிறது. டிசைன் மற்றும் வசதிகளைத் தவிர மற்ற அனைத்து மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் பாகங்களுமே ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரில் ஒன்று தான். எனவே என்மேக்ஸ் ஸ்கூட்டரை இந்தியாவில் தயாரிப்பதில் யமஹாவிற்கு பிரச்சினை ஏதும் இருக்காது.

இதுவும் என்மேக்ஸை இந்தியாவில் வெளியிடும் யமஹாவின் முடிவில் முக்கியப் பங்கு வகித்திருக்கும். இரண்டு ஸ்கூட்டர்களிலுமே 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 8,000 rpm-ல் 15 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 14 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

ஏராக்ஸில் இருந்து என்மேக்ஸ் ஸ்கூட்டரானது ஏஸ்தெடிக்கலாக வேறு டிசைனைக் கொண்டிருக்குமே தவிர, பிராக்டிகாலிட்டி அளவில் இரண்டுமே ஒன்று தான். முன்பக்கம் ஃபிளோர் போர்டு இருக்காது, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜை மட்டுமே என்மேக்ஸும் கொண்டிருக்கிறது (ஏராக்ஸில் 24.5 லிட்டர்). ஆனால், ஏராக்ஸை விட 10 கிலோ அதிகமாக 135 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது என்மேக்ஸ் 155.

தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஒரு ஸ்கூட்டராகவே என்மேக்ஸ் 155-யும் இருக்கும். இந்த ஸ்கூட்டரில் டூயல் சேனல் ஏபிஎஸ், 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, கீலெஸ் இக்னிஷன், LED விளக்குகள், ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் குறைவான விலையில் வெளியிடும் பொருட்டு சில வசதிகளை யமஹா குறைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட சற்று கூடுதலான விலையிலேயே புதிய என்மேக்ஸ் 155 வெளியாகும் எனத் தெரிகிறது. ஏராக்ஸ் ஸ்கூட்டரானது 1.43 லட்சம் ரூபாய் முதல் 1.46 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரை 1.50 லட்சம் ரூபாய் அல்லது அதனையொட்டி விலையில் நாம் எதிர்பார்க்கலாம். 2027ல் இந்தப் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட யமஹா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வெளியாகும் ஐந்தாவது பெர்ஃபாமன்ஸ் மேக்ஸி ஸ்கூட்டராக இந்த யமஹா என்மேக்ஸ் 155 இருக்கும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஐந்து ஸ்கூட்டர்களையும் வாங்கும் அளவிற்கு போதுமான வாடிக்கையாளர்கள் இருப்பார்களா என்பது தான். ஏராக்ஸ் 155-க்கு தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அது மிகவும் குறைவான அளவு தான். ஒவ்வொரு மாதமும் 2,000 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே ஏராக்ஸ் விற்பனையாகி வருகிறது.

புதிய ஸ்கூட்டர்களின் வெளியீட்டோடு புதிய வாடிக்கையாளர்களும் சேர்ந்தால் தான் புதிதாக உருவாகி வரும் 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவே சந்தையில் தாக்குப்பிடிக்க முடியும். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நினைப்பதைப் போலவே பிராக்டிகாலிட்டி குறைவாக, பெர்ஃபாமன்ஸை அள்ளிக் கொடுக்கும் ஸ்கூட்டரை அதிகம் வாங்க அதிக வாடிக்கையாளர்கள் விரும்புவார்களா? காலம் தான் பதில் சொல்லும்.

Article Published On: Monday, June 8, 2026, 10:02 [IST]
English summary
Yamaha to launch nmax 155 maxi scooter next year in india
மேலும்... #yamaha #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out