வாடிக்கையாளர்களை ஏமாற்றிய யமஹா..? இப்படி செய்வாங்கன்னு நினைச்சுக் கூட பார்க்கலை!
இந்தியாவில் கடந்தாண்டு புதிய XSR 155 என்ற நியோ ரெட்ரோ டிசைன் கொண்ட பைக் மாடலை வெளியிட்டது யமஹா. தற்போது அதே பைக்கை ஜப்பானிலும் முதல் முறையாக வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இந்திய XSR 155 பைக்குடன் ஒப்பிடும் போது ஜப்பானிய XSR 155 பைக் மாடல் சில இடங்களில் மட்டும் வேறுபடுகிறது. அது எந்தெந்த இடங்கள், இரண்டு பைக்குகளில் எது சிறப்பாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் XSR 155 பைக்கை, கிரேயிஷ் கிரீன் மெட்டாலிக், விவிட் ரெட், மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என ஐந்து நிறங்களில் யமஹா விற்பனை செய்து வருகிறது. இதில் கருப்பு நிறத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தியது. ஜப்பானில் மூன்று நிறங்களில் மட்டுமே இந்த பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில் இரண்டு கிரேயிஷ் கிரீன் மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் கிரே ஆகிய நிறங்கள் தான். ஆனால் ஜப்பானில் இவை வேறு பெயரில் அழைக்கப்படுகின்றன.

மூன்றாவதாக கருப்பு நிறம் கொண்ட XSR 155 பைக்கும் ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கருப்பு நிறம் கொண்ட XSR 155 பைக்கை விட மிகவும் கிளாஸியாக இருக்கிறது ஜப்பானிய XSR 155 பைக்கின் கருப்பு நிறம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த பைக்கில் கருப்பு நிறம் மட்டுமே இருக்கும். வேறு எந்த ஹைலைட்களும் இருக்காது. அலாய் வீல்களும் கூட கருப்பாகவே கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஜப்பானிய பைக்கில் கோல்டன் நிற அலாய் வீல்கள், எரிபொருள் டேங்கின் மேல் கோல்டன் நிற பின் ஸ்ட்ரிப்புகள், வெள்ளை நிற யமஹா எழுத்துக்களின் பேக்கிரவுண்டில் சிவப்பு நிறம் என ஹைலைட்கள் நிரம்பியதாக இருக்கிறது அதே கருப்பு நிறம். இது பைக்கிற்கு மிகவும் கிளாஸியான லுக்கைக் கொடுக்கிறது. இந்திய கருப்பு நிற XSR 155 பைக் அடிப்படையான ஒன்றாகவே இருக்கிறது. கட்டுரையின் இரண்டு புகைப்படங்களை வைத்து நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

இரண்டாவது வேறுபாடு அலாய் வீல்கள். இந்த மாடலில் இருக்கும் அலாய் வீல் டிசைனில் இருந்து சற்று வேறு மாதிரியாக, ஸ்டைலான அலாய் வீல் டிசைனைக் கொண்டிருக்கிறது ஜப்பானிய XSR 155 பைக். தனியாக பார்க்கும் போது இரண்டு பைக்குகளின் அலாய் வீல்களும் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் ஒப்பிட்டுப பார்க்கும் போது ஜப்பானிய பைக்கின் அலாய் வீல் டிசைன் சிறப்பாக இருப்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
மூன்றாவது இன்ஜின். இரண்டு பைக்குகளிலும் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஜப்பானிய XSR 155 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜின் கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் பவரை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் இன்ஜின் 18.2 PS பவரை உற்பத்தி செய்யும் நிலையில், ஜப்பானிய பைக்கானது 19 PS பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொணடுள்ளது.
இந்த மூன்று வேறுபாடுகளைத் தவிர இரண்டு நாடுகளில் விற்பனை செய்யப்படும் யமஹா XSR 155 பைக்குகளுக்கு இடையில் வேறு எந்த மாற்றமும் இல்லை. ஜப்பானில் இந்த பைக்கை 4.90 லட்சம் யென் (இந்திய மதிப்பிற்கு 2.97 லட்சம் ரூபாய்) என்ற விலையில் வெளியிட்டுள்ளது யமஹா. இந்தியாவில் 1.50 லட்சம் ரூபாய் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த கிளாஸி நியோ-ரெட்ரோ ஸ்டைல் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் XSR 155 பைக்கில் எந்தக் குறையும் பெரிதாக இல்லை என்றாலும், ஜப்பானில் கொடுக்கப்பட்டிருப்பது போன்ற கருப்பு நிறத்தை இந்தியாவிலும் கொடுத்திருக்கலாம் என வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். இப்போதும் ஒன்று கெட்டப்போகவில்லை, அடுத்த அப்டேட்டில் அதே கருப்பு நிறத்தை இந்தியாவிற்கு யமஹா கொண்டு வரலாம். கொண்டு வருமா?


Click it and Unblock the Notifications