650 சதவீதம் உயர்ந்த யமஹா பைக்கின் விற்பனை.. இப்போ இந்த பைக்க வாங்கத் தான் யமஹா ஷோரூம்ல கூட்டம் அலைமோதுது!

விலை குறைவான பெர்ஃபாமன்ஸ் பைக்குகள் என்று சொன்னவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது யமஹா தான். அந்நிறுவனத்தின் 155 சிசி பைக்குகளுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முதலில் R15 மற்றும் MT-15 ஆகிய இரண்டு பைக் மாடல்களை மட்டுமே இந்த இன்ஜின் பிளாட்ஃபார்முடன் யமஹா விற்பனை செய்து வந்தது. கடந்த ஆண்டு மூன்றாவதாக புதிய பைக் மாடல் ஒன்றையும் வெளியிட்டது.

எந்த பைக்கை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது இப்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், XSR 155 பைக்கை பற்றித் தான். முன்னர் வெளிநாடுகளில் மட்டுமே இந்த பைக் மாடலை யமஹா விற்பனை செய்து வர, எப்போது இதனை இந்தியாவில் வெளியிடுவீர்கள் என யமஹா ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் விதமாக கடந்தாண்டு இந்தியாவிலும் இந்த XSR 155 பைக்கை யமஹா விற்பனைக்குக் கொண்டு வந்தது.

Yamaha XSR 155

விற்பனைக்குக் கொண்டு வந்தது பெரிய விஷயமல்ல, அதனை என்ன விலையில் கொண்டு வந்தது என்பது தான் சிறப்பு. ஏற்கனவே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த இரண்டு 155 சிசி பைக்குகளை விடவும் குறைவான விலையில், ஆனால் வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் எந்தக் குறையுமின்றி வெளியிட்டது யமஹா. இதனால் குஷியான இளைஞர்கள் இந்த கிளாஸியான யமஹா பைக்கை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

XSR 155 பைக்கின் விற்பனை மார்ச் மாதம் 651.95 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்த பைக் மாடல் வெறும் 924 யூனிட்டுகளே விற்பனையாகியிருந்தது. ஆனால் மார்ச் மாதம் இதுவே 652 சதவீதம் அதிகமாக 6,948 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலமே இந்த XSR 155 பைக் மாடலை இளைஞர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Yamaha R15 and MT 15

கடந்த மார்ச் மாதம் யமஹாவின் மற்ற இரண்டு 155 சிசி பைக்குகளான R15 மற்றும் MT-15 ஆகிய இரண்டு மாடல்களும் முறையே 8,133 யூனிட்டுகள் மற்றும் 9,343 யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது R15 பைக்கின் விற்பனை 12.04 சதவீதமும், MT-15 பைக்கின் விற்பனை 2.98 சதவீதமும் குறைந்திருக்கிறது.

யமஹாவின் FZ சீரிஸ் பைக்குகளே 150 சிசி பிரிவில் அந்நிறுவனத்திற்கு அதிகம் விற்பனையாகும் ஒன்றாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சுமார் 17,227 FZ சீரிஸ் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது யமஹா. இது பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 2.23 சதவீதம் அதிகமாகும். இதுவே கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 48.73 சதவீதம் விற்பனை உயர்வாகும்.

இந்த FZ சீரிஸ் பைக்குகளை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. அதற்கடுத்ததாக குறைவான விலையைக் கொண்டிருப்பது XSR 155 தான், ரூ.1.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் R15 பைக் மாடலானது ரூ.1.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், MT-15 பைக் மாடலானது ரூ.1.59 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 150 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் FZ சீரிஸ் பைக்குகள் 17,000 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கும் நிலையில், 155 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்ம் பைக் மாடல்கள் மொத்தமாக 25,000 யூனிட்டுகளுக்கும் மேலாக விற்பனையாகியிருக்கிறது. சிறப்பான பெர்ஃபாமன்ஸுடன் நல்ல மைலேஜைத் தரக்கூடிய பைக்குகளாகவும் இவை இருப்பது அதிகம் விற்பனை செய்யப்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையிலேயே R15, MT-15 மற்றும் XSR 155 ஆகிய பைக்குகள் இருக்கின்றன. ஸ்போர்ட்டி, ஸ்ட்ரீட் நேக்கட் மற்றும் நியோ ரெட்ரோ என மூன்று வகையான டிசைன்களைக் கொண்டிருப்பதால் தேர்ந்தெடுக்கவும் நமக்கு எளிதாகவும், கூடுதல் தேர்வுகளைக் கொடுக்கும் வகையிலும் இருக்கின்றன. எனவே விலை அதிகமான இந்த பைக்குகள் அதிகம் விற்பனையாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2026, 12:51 [IST]
English summary
Yamaha xsr 155 sales increased by 652 percent in march compared to february
மேலும்... #yamaha #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+