ரூ.2.30 லட்சத்தில் புதிய யமஹா R2 ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்... R15க்கு மேலான ரகத்தில் சூப்பர் மாடல்!!

இளைஞர்களிடம் ஆவலை ஏற்படுத்தியிருந்த புத்தம் புதிய யமஹா YZF-R2 ஸ்போர்ட்ஸ் பைக் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக R15 பைக்கிற்கு மேலாக அடுத்த கட்டத்தில் ஒரு பைக்கை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இந்த புதிய மாடல் முக்கியமான தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் R வரிசை பைக் குடும்பத்தில் R15 மற்றும் R3 ஆகிய இரண்டு மாடல்களுக்கு இடையிலான ரகத்திலும், விலையிலும் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி பயன்பாட்டு அம்சங்களுடன் வார இறுதி பயணங்களுக்கும் ஏற்ற வகையில் ஸ்போர்ட்டியான தோற்றத்தையும் செயல்திறனையும் ஒருங்கே பெற்ற வகையில் இந்த புதிய ஆர்2 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

Yamaha R2

எஞ்சின்

புதிய யமஹா ஒய்இசட்எஃப் ஆர்2 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 204cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.5 பிஎச்பி பவரையும் 19.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Also Read

இளைஞர்களின் கனவு மாடலாக உள்ள R15 பைக்கில் உள்ள 155சிசி எஞ்சினுடன் ஒப்பிடும்போது புதிய ஆர்2 பைக்கில் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் நகரத்தில் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளிலும் பைக்கை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் செயல்திறனுடன் ஓட்டுதலில் புதிய அனுபவத்தை தரும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வது போன்ற சூழல்களில் இந்த பைக்கின் எஞ்சின் கூடுதல் பவரை வெளிப்படுத்துவதால் எளிதாக இருக்கும்.

Yamaha R2

குறைவான எடை

இந்த புதிய ஆர்2 பைக்கின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் இலகுவான எடையை குறிப்பிடலாம். இந்த பைக் வெறும் 149 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 200cc பிரிவில் இந்த குறைந்த எடை சிறப்பான கையாளுமை ஓட்டுபவருக்கு வழங்கும். இதனால், நகரப் போக்குவரத்தில் பைக்கை எளிதாக கையாள முடிவதுடன், வளைவான சாலைகளில் செல்லும்போதும் குறைந்த எடை ஓட்டுபவருக்கு எளிதாக இருக்கும்.

Also Read

இருக்கை உயரம்

இந்த பைக்கின் இருக்கை உயரம் தரையிலிருந்து 810மிமீ ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம் இருந்தாலும், அதிக உயரமான ரைடர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர உயரம் கொண்டவர்களுக்கும் இந்த இருக்கை அமைப்பு எளிதாக கையாளும் வாய்ப்பை வழங்கும் என நம்பலாம். ஆர்2 பைக்கில் ரைடிங் பொசிஷன் என்பது ஸ்போர்ட்டியாக இருந்தாலும், தினசரி பயன்பாட்டை கருத்தில் கொண்டு பைக்கின் ஒட்டுமொத்த அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விதமான சாலை நிலைகள், சூழல்களிலும் பைக்கை கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது.

குயிக் ஷிஃப்டர் வசதி

இந்த பைக்கில் கவனம் ஈர்க்கும் மற்றொரு அம்சம் quick shifter தொழில்நுட்பமாக குறிப்பிடலாம். இதன்மூலமாக க்ளட்ச்சை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தாமல் கியர் மாற்றுவதற்கு உதவும். மேலும், கியரை அதிகரிக்கவும், குறைப்பதற்கும் இது பயன்படும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். எனவே, குயிக் ஷிஃப்ட்டர் இல்லாத பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.2.30 லட்சமும், குயிக் ஷிஃப்ட்டர் வேரிண்ட்டிற்கு ரூ.2.39 லட்சமும், ஆர்2 எம் என்ற உயர்வகை வேரியண்ட்டிற்கு ரூ.2.53 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட், மூன்றுவிதமான ரைடிங் மோடுகள், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டம், ஸ்மார்ட் கீ சிஸ்டம், 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு வண்ணத் தேர்வுகள், உபகரணங்களில் வேறுபாடுகள் இருக்கும். அதிக ஸ்போர்ட்டி ரைடிங் அனுபவத்தை விரும்புபவர்கள் Quick Shifter அல்லது R2 M வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். இந்தியாவில் யமஹா ஆர்15 பைக் நீண்ட காலமாக 150cc ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. ஆனால் R15-ல் இருந்து அடுத்தகட்ட பெர்ஃபார்மென்ஸ் பைக்கிற்கு செல்ல விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மாடலாக இருக்கும்.

போட்டியாளர்கள்

ரூ.2.30 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகமாகியுள்ளதால் புதிய யமஹா ஆர்2 பைக் மாடலானது கேடிஎம் ஆர்சி 200 உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் போட்டியிடும். இந்த போட்டியில் குறைந்த எடை, செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை இந்த பைக்கிற்கு சாதகமாக இருக்கும். புதிய யமஹா ஆர்2 பைக்கிற்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பணம் செலுத்தி பைக்கை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் டெலிவரி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Corrections

This article has been updated with more information and more images.
Article Published On: Thursday, August 27, 2026, 13:23 [IST]
English summary
Yamaha yzf r2 launched india price specifications booking
மேலும்... #yamaha #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out