ஃபேஸினோ போலவே இருக்கும் யமஹாவின் புதிய ஃபேஸியோ 125 சிசி ஸ்கூட்டர்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல விதமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது யமஹா. இந்தியாவில ஃபேஸினோ, ரேஸிஆர் மற்றும் ஏராக்ஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் அப்படி இல்லை ஒரே நாட்டிலேயே பத்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர் மாடல்களை விற்பனையில் வைத்திருக்கிறது யமஹா.

அப்படி ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் ஃபேஸியோ (Fazzio). இந்தியாவில் பேஸினோ என்ற பெயரைப் கேட்பது போலவே இருக்கிறதே என இந்த பேஸியோ ஸ்கூட்டரை சற்று உற்று நோக்கினோம். அடிப்படையில் இரண்டும் ஒரே இன்ஜினைக் கொண்ட ஸ்கூட்டர் தான். ஆனால் டிசைன் மற்றும் வசதிகளில் மட்டும் சற்று வேறுபடுகிறது ஃபேஸியோ.

Yamaha Fazzio

2022ம் ஆண்டிலிருந்தே இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ஸ்கூட்டரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜப்பானில் வெளியிட்டுள்ளது யமஹா. ரெட்ரோ டிசைனே கர்வியாக இல்லாமல் பாக்ஸியான வடிவில் ஃபேஸியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டரை தனித்துவமான ஒன்றாகக் காட்டுகிறது.

லைட் கிரேயிஷ் லீஃப் கிரீன் சாலிட், டல் ப்ளூ சாலிட், பேல் கிரீனிஷ் யெல்லோ சாலிட் மற்றும் பிளாட் மெட்டாலிக் உள்ளிட்ட நான்கு தனித்துவமான நிறங்களில் இந்த ஸ்கூட்டரை யமஹா விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர்களில் பொதுவாகக் காணப்படும் நிறங்களாக இவை இல்லை. லைட் மற்றும் பிரைட் நிறங்களாக இருப்பது இந்த ஃபேஸியோ ஸ்கூட்டரை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உள்ளது.

Yamaha Fazzio

இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வரும் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் இந்த ஃபேஸியோவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஜினை விட 0.2 hp அதிக பவரையும், 0.3 Nm அதிக டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகையில் 8.4 hp பவர் மற்றும் 10.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் யமஹா விற்பனை செய்யும் ஸ்கூட்டர்களைப் போலவே மிகவும் எடை குறைவான ஒன்றாகவே இந்த ஃபேஸியோ ஸ்கூட்டரும் உள்ளது. இதன் எடை வெறும் 97 கிலோ தான். அதனால் .யார் வேண்டுமானாலும் இந்த ஸ்கூட்டரை எளிதாகப் பயன்படுத்த முடியும். சீட் உயரமும் 765 மிமீ தான். அதனால் உயரம் குறைவானவர்களும் சிரமமின்றி இந்த ஸ்கூட்டரைப் பயன்படுத்த முடியும்.

Yamaha Fazzio

போதுமான அளவு லெக் ரூம் இருக்கும் இந்த 125 சிசி ஸ்கூட்டரில் 19.1 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஒவ்வொரு அம்சத்தையும் யமஹா பார்த்து பார்த்து வடிவமைத்திருப்பதால் வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்கள் குறைவானவே இருக்கும். ஜப்பான் மட்டுமின்றி, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த 125 சிசி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

மேலும், விற்பனை செய்யப்பட்டு வரும் நாடுகளில் எல்லாம் மிகவும் பிரபலமான ஒரு ஸ்கூட்டராகவே இந்த ஃபேஸியோ இருக்கிறது. ஜப்பானிய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த 125 சிசி ஸ்கூட்டரை இந்திய மதிப்பிற்கு 1.96 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது யமஹா.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பெரும் ஸ்கூட்டர் சந்தையாக வளர்ந்து வரும் நிலையிலும், வெகுசில ஸ்கூட்டர்களை மட்டுமே யமஹா இங்கே விற்பனை செய்து வருகிறது. இந்த ஃபேஸியோ போல தனித்துவமான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களில் ஒன்றிரண்டையாவது யமஹா இங்கே வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வு கிடைத்தது போலவும் இருக்கும்.

Article Published On: Sunday, July 12, 2026, 8:08 [IST]
English summary
Yamahas retro boxy 125 cc scooter fazzio full details and specs
மேலும்... #yamaha #scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X