1970ஸ் பைக்குகளை இப்போ வாங்க முடியலயேனு கவலையே வேணாம்! யெஸ்டி கம்பெனியின் புதிய பைக்!

கிளாசிக் லெஜென்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் இந்தியாவில் யெஸ்டி ரோட்ஸ்டர் (yezdi Roadster) பைக்கில் 'ரெட் வுல்ஃப்' (Red Wolf) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி முதல் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட்டை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சூட்டப்பட்டுள்ள பெயருக்கேற்ப, புதிய யெஸ்டி ரோட்ஸ்டர் ரெட் வுல்ஃப் எடிஷன் தனித்துவமான சிவப்பு வண்ணத்தில் வந்துள்ளது. பைக்கில் பல இடங்களில் காணப்படும் பளபளப்பான குரோம் பாகங்கள் இதற்கு மேலும் அழகூட்டுகின்றன. பெட்ரோல் டேங்க் ஆனது அடர் சிவப்பு நிறத்துடன் கருப்பு கிராபிக்ஸை கொண்டுள்ளது. பைக்கின் ஹேண்டில்பார், என்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய் போன்ற பாகங்களிலும் குரோம் வேலைப்பாடுகள் நீடிக்கின்றன.

yezdi roadster red wolf edition

புதிய வண்ணம் மற்றும் இந்த எடிஷனுக்கான பிரத்யேக பிராண்டிங் உடன் ரோட்ஸ்டர் ரெட் வுல்ஃப் எடிஷன் ஒரு தனித்துவமான பழுப்பு நிற இருக்கையையும் கொண்டுள்ளது. இருப்பினும், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், நீர்த்துளி வடிவ பெட்ரோல் டேங்க் மற்றும் தாழ்வான, நீளமான தோற்றம் உள்ளிட்ட பைக்கின் ஒட்டுமொத்த நியோ-ரெட்ரோ வடிவமைப்பு மாற்றமின்றி அப்படியே உள்ளது.

வழக்கமான ரோட்ஸ்டர் பைக் உடன் ஒப்பிடுகையில் தொழிற்நுட்ப அம்சப் பட்டியலிலும் எந்த மாற்றமும் இல்லை. முழு எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை போன்ற முக்கிய அம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிஷனிலும் இடம்பெற்றுள்ளன. பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பும் அதே திறனுடன் தொடர்கிறது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

yezdi roadster red wolf edition

இதேபோல், மெக்கானிக்கல் ரீதியாகவும் யெஸ்டி ரோட்ஸ்டர் ரெட் வுல்ஃப் எடிஷன் ஸ்டாண்டர்ட் ரோட்ஸ்டர் பைக்கைப் போன்றே உள்ளது. இதற்கு முன்னர் இருந்த இரட்டை தொட்டில் சட்டகம் அப்படியே நீடிக்கிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பை வழங்குகிறது.

யெஸ்டி ரோட்ஸ்டர் ரெட் வுல்ஃப் எடிஷன் பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7,300 ஆர்பிஎம்-இல் 28.7 பிஎச்பி ஆற்றலையும், 6,000 ஆர்பிஎம்-இல் 29.6 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் இல்லாமல் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் ஷார்க்ஸ்கின் நீலம், ஸ்மோக் க்ரே, ப்ளட்ரஷ் மரூன், சேவேஜ் க்ரீன், ஷேடோவ் கருப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் ரூ.1.94 லட்சம்- ரூ.2.08 லட்சம் வரையிலான வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா, இந்தியாவில் பிறந்து உலகளவில் பிரபலமான கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிராண்ட். புதிய ரெட் வுல்ஃப் எடிஷன் யெஸ்டியின் ரோட்ஸ்டர் பைக்குகள் வரிசையில் இணைகிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான யெஸ்டி போல, ரோட்ஸ்டர் ரெட் வுல்ஃப், ஓட்டுநரை ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் காட்டும் தன்மையைக் கொண்டுள்ளது.

இதன் கம்பீரம் பழமையான 1970களின் யெஸ்டி பைக்குகளின் அடர் சிவப்பு மற்றும் மெட்டாலிக் நிறங்களை நினைவூட்டுகிறது. இப்போது அத்தகைய கம்பீரமான தோற்றம் மட்டுமின்றி, குரோம் பூச்சுகள் உடன் இந்திய சாலைகளுக்கும் இன்றைய கால இளைஞர்களுக்கும் ஏற்ற செயல்திறன்மிக்க வடிவமைப்பில் உள்ளது. மற்ற வழக்கமான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), ஜாவா (Jawa) பைக்குகளில் இருந்து வேறுப்பட்ட பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த புதிய ரோட்ஸ்டர் ரெட் வூல்ஃப் எடிசன் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2026, 5:00 [IST]
English summary
Yezdi roadster red wolf edition launched check price features all details here
மேலும்... #yezdi #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+