ரூ.43,000 விலையில் புதிய மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது!

By Saravana

பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் பொருந்திய புதிய மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட 110சிசி ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும். இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் பற்றிய கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


வசதிகள்

வசதிகள்

விஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் ஃபைன் மீ விளக்குகள், கெய்டு மீ லைட்டுகள், காரில் இருப்பது போன்று இருக்கை உயரத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளும் வசதியுடன் வந்திருக்கிறது. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இந்த வசதியுடன் வந்திருக்கும் முதல் மாடல் கஸ்டோதான். செஞ்சூரோ போன்றே இந்த புதிய ஸ்கூட்டரில் ப்ளிப் கீ டைப் சாவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருக்கு கீழே கூலிங் கிளாஸ், மொபைல்போன் போன்றவற்றை வைப்பதற்கான இடவசதி உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109.6 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறம், பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிஸ்க் பிரேக்குகள் இல்லை. 12 இஞ்ச் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த புதிய கஸ்டோ ஸ்கூட்டரில் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

 கிரவுண்ட் கிளிரயன்ஸ்

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

இந்த ஸ்கூட்டர் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

விலை

விலை

மஹிந்திரா கஸ்டோ டிஎக்ஸ்- ரூ.43,000

மஹிந்திரா கஸ்டோ விஎக்ஸ்- ரூ.47,000

(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2014, 9:52 [IST]
English summary
Mahindra Two-wheelers has launched its all new global scooter ‘GUSTO’ in India. Mahindra Gusto will be available in two trim and priced at INR 43,000 for Dx and INR 47,000 for Vx variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+