செம ஸ்டைலான டிசைனில் வரும் புதிய பல்சர்!
இந்த ஆண்டு இறுதியில் புதிய 375 சிசி பல்சர் பைக்கை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக் தற்போதைய பல்சர் பைக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனையும், படு அசத்தலாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பார்ட்னரான கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 390 பைக்கின் அறிமுகத்தை தொடர்ந்து இந்த புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்த உள்ளது. கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய பைக்கிலும் பொருத்தப்பட உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150கிமீ. 0-100கிமீ., வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும். ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள பல்சர் 375 பைக்கின் மாதிரி படத்தை கீழே பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications








