பஜாஜ் ஆட்டோவின் புதிய 150சிசி டிஸ்கவர் பைக் மாடல்கள் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டிஸ்கவர் பிராண்டில் இன்று இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு விட்டுள்ளது. டிஸ்கவர் 150எஃப் மற்றும் டிஸ்கவர் 150எஸ் ஆகிய பெயர்களில் இந்த புதிய மாடல்கள் கிடைக்கும்.
இரு மாடல்களும் டிசைனில் சிறிய மாறுதல்கள் கொண்டவை. டிஸ்கவர் 150எஃப் மாடல் செமி ஃபேர்டு வெர்ஷனாகவும், மற்றொன்று அதன் சாதாரண மாடலாகவும் இருக்கிறது. இவை இரண்டும் மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்சை வழங்கும் என பஜாஜ் தெரிவிக்கிறது.

கூடுதல் தகவல்கள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

எஞ்சின்
இரு மாடல்களிலும் ஒரே எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இது புதிய 144.8சிசி டிடிஎஸ்- ஐ எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.3 எச்பி பவரையும், 12.75 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

சஸ்பென்ஷன்
இந்த இரு புதிய பைக் மாடல்களிலும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது.

அலாய் வீல்கள்
பல்சர் 200எஸ்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே டிசைனிலான 10 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பைக் மாடல்கள் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை.

எடை
புதிய டிஸ்கவர் 150எஸ் மாடலின் டிஸ்க் பிரேக் மாடல் 130 கிலோ கெர்ப் எடையும், சாதாரண மாடல் 129 கிலோ கெர்ப் எடையும் கொண்டவை. டிஸ்கவர் 150எஃப் செமி ஃபேர்டு மாடல் 132 கிலோ கெர்ப் எடை கொண்டது.

வண்ணங்கள்
டார்க் புளூ, ஒயின் ரெட், எபோனி பிளாக் மற்றும் டார்க் பாட்டில் க்ரீன் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும். இதன் சிறப்பான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் டிசைனும் கவர்வதாக இருக்கின்றன.

டயர்கள்
எம்ஆர்எஃப் நைலோக்ரிப் ஸாப்பர் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

விலை
150எஸ் டிரம் பிரேக்: ரூ.51,720
150எஸ் டிஸ்க் பிரேக்: ரூ.54,725
150எஃப்: ரூ.58,739
அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலைகள்.

ஸ்கூட்டர் இல்லை
ஸ்கூட்டர் தயாரிப்பு மீது இப்போது கவனம் செலுத்தப்படாது என்று இந்த பைக் அறிமுக விழாவில் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. மேலும், உலகளாவிய சந்தையை கவனத்தில் கொண்டு எதிர்கால வர்த்தக திட்டங்களை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








