ரூ.46,000 விலையில் புதிய பஜாஜ் டிஸ்கவர் பைக் அறிமுகம்!

By Saravana

ரூ.46,000 விலையில் டிஸ்கவர் வரிசையில் புதிய 100சிசி பைக்கை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டிஸ்கவர் 100 மற்றும் டிஸ்கவர் 100டி பைக்குகளுக்கு இடையில் இந்த புதிய பைக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய டிஸ்கவர் பைக் டிஸ்க் பிரேக் மாடலிலும் கிடைக்கும். ஆனால், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.3,000 கூடுதல் விலையில் கிடைக்கும். மற்ற டிஸ்கவர்களுக்கும், டிஸ்கவர் 100 எம் என்ற பெயரில் வந்திருக்கும் புதிய மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பஜாஜ் ஆட்டோவின் 4 வால்வு கொண்ட 102சிசி திறன் கொண்ட டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 9.3 பிஎஸ் பவரையும், 9.02 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

கியர் பாக்ஸ் மாற்றம்

கியர் பாக்ஸ் மாற்றம்

டிஸ்கவர் 100 பைக்கில் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், இதில் டிஸ்கவர் 100டி பைக்கில் இருக்கும் அதே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

புதிய டிஸ்கவர் 100எம் பைக் லிட்டருக்கு 84 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் 70 முதல் 75 கிமீ மைலேஜ் தருவது உறுதி என்கிறது பஜாஜ் ஆட்டோ.

 கிரவுன்ட் கிளியரன்ஸ் மாற்றம்

கிரவுன்ட் கிளியரன்ஸ் மாற்றம்

டிஸ்கவர் வரிசை பைக்குகள் பொதுவாக 1,305 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், புதிய டிஸ்கவர் 100 எம் பைக் 1,55 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, நீலம் தவிர சிவப்பு, நீலம், ஆலிவ் டிகெல்ஸ் கொண்ட கருப்பு வண்ணங்கள் என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும்.

அடுத்து ஒரு புதிய மாடல்

அடுத்து ஒரு புதிய மாடல்

டிஸ்கவர் வரிசையில் 100, 100டி, 125, 125எஸ்டி, மற்றும் 125டி மாடல்களை தொடர்ந்து 6வது மாடலாக 100எம் வந்துள்ளது. இதுதவிர, இன்னும் சில நாட்களில் அதிக பவர் கொண்ட புதிய டிஸ்கவர் மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2013, 16:06 [IST]
English summary
Bajaj is getting good with offering bikes that deliver good fuel economy while still maintaining decent performance figures. The new Discover 100M offers testimonial to that. The new Bajaj Discover 100M, launched on October 15th, is being offered for a starting price of Rs 46,000 (Ex-showroom, Delhi). An added 200mm front petal disc brake will add Rs 3,000 to the base price.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+