புதிய பஜாஜ் டிஸ்கவர் 125 எம் பைக் விற்பனைக்கு வந்தது! - விபரம்
டிஸ்கவர் வரிசையில் பல புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று புதிதாக ஒரு மாடல் இணைந்துள்ளது.
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த டிஸ்கவர் 100 எம் பைக்கின் சற்று கூடுதல் பவர் கொண்ட மாடலாக டிஸ்கவர் 125எம் என்ற பெயரில் இந்த புதிய பைக் வந்துள்ளது.

இந்த பைக்கில் அதிகபட்சம் 11.3 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் கிடைக்கும்.
டிரம் பிரேக் மாடல் ரூ.48,000லும், முன் சக்கரத்தில் 200மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் ரூ.50,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு, மெஜந்தா, நீலம், சில்வர் மற்றும் நீலம் ஆகிய வண்ணங்கள் நீலம் மற்றும் தங்க நிற கலவையுடன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








