அடுத்த ஓர் ஆண்டில் 8 புதிய பைக்குகளை களமிறக்கும் பஜாஜ்!

ஹோண்டாவிடம் இழந்த இரண்டாவது இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சிகளை பஜாஜ் ஆட்டோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதற்கான வியூகங்களுடன் தற்போது பஜாஜ் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, இன்னும் ஓர் ஆண்டிற்குள் 2 புதிய பல்சர் மாடல்களும், 6 புதிய டிஸ்கவர் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
இதில், 375சிசி திறன் கொண்ட புதிய பல்சரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பஜாஜ் ஆட்டோ தற்போது ஆயத்தமாகி வருகிறது. இதேபோன்று, 150சிசி பிரிவில் மற்றொரு பல்சரையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, 6 புதிய டிஸ்கவர் பைக்குகள் அறிமுகப்படுத்த இருக்கின்றன. இதில், 4 டிஸ்கவர் பைக்குகள் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக பஜாஜ் ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கு இடையில் இந்த புதிய பைக்குகளை நிலைநிறுத்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








