சென்னையில் புதிய டிஸ்கவர் பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்
சென்னையில் பஜாஜ் ஆட்டோவின் புதிய டிஸ்கவர் 125டி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிஸ்கவர் 125டி பைக்கில் ஒரு சில மாற்றங்களுடன் இந்த புதிய பைக்கை சற்று விலையை குறைத்து களமிறக்கி இருக்கிறது பஜாஜ்.
பட்ஜெட் விலையில் சொகுசு, பெர்ஃபார்மென்ஸ் இரண்டையும் விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோவின் தென் பிராந்திய பொது மேலாளர் அஸ்வின் ஜெய்காந்த் கூறினார். பஜாஜ் டிஸ்கவர் 125டி பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
டிஸ்கவர் 125எஸ்டி பைக்கில் இருக்கும் அதே 124.6 டிடிஎஸ்ஐ எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
இந்த பைக் 9,000 ஆர்பிஎம்மில் 12.3 பிஎச்பி ஆற்றலையும், 6500 ஆர்பிஎம்மில் 10.8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

சஸ்பென்ஷன்
டிஸ்கவர் 125எஸ்டி பைக்கிற்கும் இதற்கும் முக்கிய வித்தியாசம் பின்புற சஸ்பென்ஷன். மோனோஷாக் சஸ்பென்ஷனிற்கு பதிலாக இந்த புதிய பைக்கில் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை
அதிக இடவசதி, சொகுசாக இருக்கும் விதத்தில், இருக்கை சற்று நீளமாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை எக்ஸ்- ஷோரூம் விலை
பஜாஜ் 125டி டிரம் பிரேக் மாடல் - ரூ. 54,022
பஜாஜ் 125டி டிஸ்க் பிரேக் மாடல் - ரூ. 57,070

யாருக்கு குறி?
125 செக்மென்ட்டில் ஹோண்டா ஷைன் முக்கிய பங்களிப்பை பெற்றுள்ளது. அந்த மார்க்கெட்டை உடைக்கும் விதமாக டிஸ்கவர் வரிசையில் 125 எஸ்டி மற்றும் 100டி பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு மட்டும் 4.5 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் 125டி என்ற மாடலையும் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








