புதிய பல்சர் 390 பைக்கின் படங்கள் வெளியாகின
இந்திய நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவரும் அதிக திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால், 375சிசி திறன் கொண்ட புதிய பல்சர் 390 மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 375சிசி திறன் கொண்ட புதிய பல்சர் 390 பைக்கின் மாதிரி படத்தை ஆட்டோகார் இந்திய இணையதளம் வெளியிட்டது.
இந்த நிலையில், தற்போது புதிய பல்சரின் கூடுதல் படங்களையும் அந்த தளம் வெளியிட்டிருக்கிறது. புதிய பல்சர் 390யின் முகப்பு கவாஸாகி நின்ஜா பைக்குகளின் முகப்பை ஒத்திருக்கிறது. இதேபோன்று, எஞ்சின் பஜாஜின் மற்றுமொரு கூட்டணி நிறுவனமான கேடிஎம் டியூக் 390 பைக்கின் எஞ்சினை பங்கிட்டுக் கொள்ள இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அம்சங்கள்
கேடிஎம் டியூக் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே அலாய் வீல்கள் மற்றும் மெட்ஸெல்லர் ரேடியல் டயர்களுடன் புதிய பல்சர் 390 அறிமுகமாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஸ்பிளிட் இருக்கைகளும் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கான தோற்றத்தை கொடுக்கிறது.

எஞ்சின்
புதிய பல்சரில் பொருத்தப்பட இருக்கும் 375சிசி திறன் கொண்ட எஞ்சின் 45 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். கேடிஎம் டியூக் 390 பைக்கை விட அதிக எடை கொண்டதாக இருக்கும்.

விலை குறைவு?
கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட இந்த புதிய பல்சர் 390 பைக் ரூ.25,000 வரை விலை குறைவானதாக இருக்கும் என பஜாஜ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே வெளியிடப்பட்டிருக்கும் படங்களுக்கும், உற்பத்தி நிலை பல்சர் 390க்கும் சில வித்தியாசங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








