ரூ.17.66 லட்சத்தில் ஸ்பெஷல் சைக்கிள்: லம்போர்கினி அறிமுகம்

பொன்விழாவையொட்டி லம்போர்கினி நிறுவனம் வெனினோ என்ற சூப்பர் காரை ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், பொன்விழாவுக்காக அடுத்த ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு ஒன்றையும் லம்போர்கினி வெளியிட்டிருக்கிறது. அது சூப்பர் கார் அல்ல.

தனது பிராண்டை மதிப்பை கூட்டும் விதமாக லிமிடேட் எடிசன் சைக்கிளை லம்போ அறிமுகம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிஎம்சி சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய சைக்கிளை உருவாக்கியிருக்கிறது. இம்பெக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய சைக்கிள் இரட்டை வர்ணம் கொண்டதாக இருக்கிறது. கார்பன் பைஃபைரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சைக்கிள் பற்றிய சுவாரஸ்ய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமாக 50 லம்போ இம்பெக் சைக்கிள்கள் தயாரிக்கப்பட உள்ளன. முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

 வரிசை எண்

வரிசை எண்

இந்த சைக்கிளில் வரிசை எண் குறிப்பிடப்பட்டு வரும்.

கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

இந்த சைக்கிள் ஃபிரேம் கார்பன் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 லெதர் சீட்

லெதர் சீட்

அவென்டேடார் காரில் போடப்படும் அதே லெதர்தான் இந்த சைக்கிளின் இருக்கையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 ஆர்டர்

ஆர்டர்

இந்த சைக்கிளை பிஎம்சி சைக்கிள் கம்பெனி மூலமாகவோ அல்லது லம்போர்கினி டீலர்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

இந்த லிமிடேட் எடிசன் சைக்கிள்கள் இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக இருக்கும்.

விலையை மட்டும் கேட்டுடாதீங்க

விலையை மட்டும் கேட்டுடாதீங்க

ரூ.17,66,322 விலையில் இந்த சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2013, 12:35 [IST]
English summary
While Lamborghini's 50th year special edition Veneno was launched in the Swiss city of Geneva yet another 50th Edition Lambo has taken birth in Switzerland. This one though, is a lot cheaper, at least relatively. We are talking about the Lamborghini 50th Edition Impec, which is a bicycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+