அழகானதாக வர்ணிக்கப்படும் புதிய பிஎம்டபிள்யூ பைக் இந்தியா வந்தது!
இந்திய மார்க்கெட்டில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் பிஎம்டபிள்யூ தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் அதிசக்திவாய்ந்த எஸ்1000ஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு அந்த நிறுவனம் தற்போது மற்றொரு புதிய பைக் மாடலை களமிறக்கி உள்ளது.
கடந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் 90ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்ட பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி பைக்தான் அது. இதுவரை வந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் மிக அழகானதாக குறிப்பிடப்படும் இந்த பைக் மாடல் நேக்டு ஸ்டைலில் முரட்டுத்தனத்தை காட்டுகிறது. பழைமையும், புதுமையும் கலந்த இந்த பைக்கின் கூடுதல் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலான பிஎம்டபிள்யூ ஆர்32 வில் பொருத்தப்பட்டிருந்த அதே கிளாசிக் ப்ளாட் ட்வின் பாக்ஸர் எஞ்சின் டிசைனுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்திய பாக்ஸர் எஞ்சினை இதில் பொருத்தியிருக்கின்றனர். 1170சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் அதிகபட்சமாக 110 எச்பி சக்தியையும், 119 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்
இந்த பைக் லிட்டருக்கு 22.2 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பைக் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

கஸ்டமைஸ் வசதி
இந்த பைக்கை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கு ஏதுவாக ஏராளமான ஆக்சஸெரீஸ்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. சொந்தமாகவோ அல்லது பைக் கஸ்டமைஸ் நிபுணர்களின் உதவியுடன் இந்த ஆக்சஸெரீஸ்களை எளிதாக மாற்றிக் கொள்ளும் விதத்திலேயே இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.பின்புற இருக்கை, சைலென்சர், வால் பகுதி ஆகியவற்றை எளிதாக கழற்றிவிட்டு, பிடித்தமான ஆக்சஸெரீஸ்களை எளிதாக பொருத்த முடியும். மேலும், ஹெட்லைட், இன்டிகேட்டர்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.

ஃபோர்க்குகள்
பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் முன்புற போர்க்குகள்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சம்
இந்த பைக்கின் மற்றொரு விசேஷமாக ஸ்விங் ஆர்மை கூறலாம். இதில், ஒருபக்கத்திலான ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டு சக்கரம் இணைக்கப்பட்டுள்ளது. மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

பிரேக்
ரேடியல் 4 பிஸ்டன் மோனோ பிளாக் பிரேக் அமைப்புடன் கூடிய 320 மிமீ டிஸ்க் பிரேக் அதி உன்னத பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும்.

மெட்டாலிக் பெயின்ட்
கருப்பு நிற மெட்டாலிக் பெயின்ட்டுடன், சில்வர் வண்ண வேலைப்பாடுகள் கொண்ட மாடலையும் பிஎமட்பிள்யூ வழங்குகிறது.

விலை
இந்தியாவி்ல ரூ.23.50 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








