புதிய 1000சிசி பிஎம்டபிள்யூ பைக் விற்பனைக்கு வந்தது! - விபரம்
புதிய 1000சிசி பிஎம்டபிள்யூ பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.
ஜப்பானிய தயாரிப்புகளான கவாஸாகி இசட்1000 மற்றும் ஹோண்டா சிபி1000ஆர் பைக்குகளுடன் இந்தியாவில் போட்டி போடும். ஆனால், ஜப்பானிய தயாரிப்புகளைவிட இரு மடங்கு கூடுதல் விலை கொண்டதாக இந்த புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் பைக் விற்பனைக்கு வந்துள்ளதால் சூப்பர் பிரிமியம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஷோரூம் விபரம்
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்திற்கு தனியாக பைக் ஷோரூம்கள் இந்தியாவில் இல்லை. தற்போது இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள பிஎம்டபிள்யூ கார் டீலரான நவ்னீத் மோட்டார்ஸ் மூலமும் டெல்லியில் உள்ள பிஎம்டபிள்யூ கார் டீலர் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சின்
புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் பைக்கில் 163 எச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1000சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரேஸ் மாடலான எஸ்1000ஆர்ஆர் பைக்கின் ஸ்ட்ரீட் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வசதி
பாதுகாப்பாகவும், சாலை நிலை மற்றும் விருப்பத்திற்கு தகுந்தவாறு ஓட்டுவதற்கு ஏதுவாக டைனமிக், டைனமிக் ஆர், ரெயின் மற்றும் ரோடு ஆகிய 4 மோடுகளில் ஓட்டுதலை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும், ஸ்டெபிளிட்டியை அளிக்கும் ஏஎஸ்சி தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இதுதவிர, கியர்ஷிப்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் உள்ளன.

விலை
ரூ.28.32 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே 1000சிசி ரகத்தில் விற்பனை செய்யப்படும் கவாஸாகி மற்றும் ஹோண்டா பைக்குகளைவிட இதன் விலை இரு மடங்கு கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








