டுகாட்டியின் புதிய மினி பனிகேல் சூப்பர் பைக் அறிமுகம்!

டுகாட்டியின் வெற்றிகரமான சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று 1199 பனிகேல். இந்த மாடலின் குறைந்த சிசி திறன் கொண்ட 899 பனிகேல் மாடல் பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு மோட்டார் ஷோ துவங்குவதற்கு முன்னதாக இந்த பைக்கை வெளியுலகுக்கு காட்டியிருக்கிறது டுகாட்டி. இந்த புதிய டுகாட்டி அரக்கன் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மிட்சைஸ் மாடல்

மிட்சைஸ் மாடல்

848 எவோ மாடலுக்கு மாற்றாக இந்த புதிய பைக்கை நிலைநிறுத்துகிறது டுகாட்டி. மேலும், 1199 பனிகேல் பைக்கின் நடுத்தர மாடலாகவும் இது வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 90 டிகிரி கோணத்தில் அமையப்பெற்ற வி ட்வின் சூப்பர் குவாட்ரோ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மோனோகாக் சேஸிஸ்

மோனோகாக் சேஸிஸ்

இந்த பைக்கில் ஃப்ரேம் இல்லாத மோனோகாக் சேஸீ பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சேஸி வெறும் 169 கிலோ மட்டுமே எடை கொண்டது. எடைக்கு தகுந்த விகிதத்தில் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த பைக் மிகச் சிறப்பாக இருக்கும் என டுகாட்டி தெரிவித்துள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இந்த பைக்கின் மற்றொரு முக்கிய மாற்றம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. 1199 பனிகேல் பைக்கில் டிஎஃப்டி வண்ணத் திரை பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த பைக்கில் கருப்பு வெள்ளை எல்சிடி பேனல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

டுகாட்டி குயிக் ஷிப்ட், டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் உண்டு. இதுதவிர, 3 வே அட்ஜெஸ்ட் கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் உண்டு.

3 வித டிரைவிங்

3 வித டிரைவிங்

இந்த பைக்கில் ரேஸ், ஸ்போர்ட்ஸ் வெட் ஆகிய மூன்று நிலைகளில் ஓட்டுவதற்கான டிரைவிங் தன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், வெட் என்ற டிரைவிங் நிலையில், எளிதாக கட்டுப்படுத்தும் வகையில் பவர் வெளிப்பாடு 110 பிஎச்பி ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு நிறத்தில் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டதாகவும், வெள்ளை நிறத்தில் சிவப்பு வண்ணம் தீட்டப்பட் சக்கரங்கள் பொருத்தப்பட்டதாகவும் இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

சிவப்பு நிற டுகாட்டி 899 பனிகேல் 14,995 டாலர் விலையிலும், வெள்ளை நிற டுகாட்டி 899 பனிகேல் 15,295 டாலர் விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2013, 15:31 [IST]
English summary
Ahead of the official opening of the show Ducati also unveiled the new 899 Panigale. The announcement of the baby Panigale was rumoured and a red model was even spotted in the wild a few weeks back. Learn more about the new bike and enjoy the new video of the 899 Panigale spending time on the track.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+