இந்தியாவில் மான்ஸ்ட்டர் 696 பைக்கை களமிறக்கும் டுகாட்டி
இந்தியாவில் மான்ஸ்ட்டர் 696 பைக்கை அறிமுகம் செய்ய டுகாட்டி முடிவு செய்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்குக்கும், இதற்கும் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் அதிக மாற்றங்கள் இருக்காது. ஆனால், எஞ்சின் மட்டும் மாற்றப்பட்டிருக்கும்.
மத்திய பட்ஜெட்டில் 800சிசி திறனுக்கு மேல் கொண்ட பைக்குகளுக்கான இறக்குமதி அதிகரிக்கப்பட்டதையடுத்து, மான்ஸ்ட்டர் 795 பைக்கின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையில் டுகாட்டி உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக 800சிசிக்கும் குறைவான சிசி திறன் கொண்ட மான்ஸ்ட்டர் 696 பைக்கை டுகாட்டி அறிமுகப்படுத்த உள்ளது.

எஞ்சின்
இந்த பைக்கில் 696சிசி ஏர்கூல்டு எல் டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்
டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக்கின் எஞ்சின் 9,000 ஆர்பிஎம் வேகத்தில் 80 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

ஒற்றுமை
மான்ஸ்ட்டர் 795 பைக்கில் இருக்கும் பல அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும். அதிக வித்தியாசங்கள் இருக்காது.

சேஸி
இந்த பைக்கில் டியூபியூலர் ஸ்டீர் டிரெல்லிஸ் ஃபிரேமை கொண்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்
795 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே சஸ்பென்ஷன் முன்புறத்தில். ஆனால், 696 பைக்கில் பின்புறத்தில் சாச்ஸ் அட்ஜெட்ஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எடை வித்தியாசம்
795 பைக்கைவிட 696 பைக் வெறும் 2 கிலோ மட்டுமே எடை குறைந்திருக்கும்.

வரி உயர்வு எதிரொலி
வரி உயர்வை சமாளிக்கும் விதமாக இந்த புதிய பைக்கை டுகாட்டி அறிமுகம் செய்ய உள்ளது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696



Click it and Unblock the Notifications








